Friday, February 26, 2010

புத்தர் காட்டிய வழி!

அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், பழக்க வழக்கங்களையும், வதந்திகளையும், வேதாகம நூட்களையும், உணர்ந்த முடிவினையும், நிறுவப்பட்ட  கோட்பாட்டினையும், திறமையான வாதத்தினையும், விசேட சித்தாந்தத்தினையும் நம்பி இருக்காதீர்கள். மற்றவர் சிறந்த அறிவாளி என்பதனாலோ, ஆசிரியரின் மேல் உள்ள நன்மதிப்பின் காரணமாகவோ அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.... உங்களுக்கு எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எது சேதம் விளைவிக்கும், எது அதிருப்தி தரும் என்று தெரிந்த பிறகு அதை விட்டு விடுங்கள். உங்களுக்கே எது சரியானது என்று தெரிந்த பிறகு அதை வளர விடுங்கள்......

Labels:

உங்களுக்கே எது சரியானது என்று தெரிந்த பிறகு அதை வளர விடுங்கள்......

அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், பழக்க வழக்கங்களையும், வதந்திகளையும், வேதாகம நூட்களையும், உணர்ந்த முடிவினையும், நிறுவப்பட்ட  கோட்பாட்டினையும், திறமையான வாதத்தினையும், விசேட சித்தாந்தத்தினையும் நம்பி இருக்காதீர்கள். மற்றவர் சிறந்த அறிவாளி என்பதனாலோ, ஆசிரியரின் மேல் உள்ள நன்மதிப்பின் காரணமாகவோ அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.... உங்களுக்கு எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எது சேதம் விளைவிக்கும், எது அதிருப்தி தரும் என்று தெரிந்த பிறகு அதை விட்டு விடுங்கள். உங்களுக்கே எது சரியானது என்று தெரிந்த பிறகு அதை வளர விடுங்கள்...... 

Labels:

Thursday, February 25, 2010

தமிழ்

என்னை நன்றாக இறைவன் படைத்தான்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே -திருமூலர்

Labels:

அஷ்டாங்க மார்க்கமாவன:

அஷ்டாங்க மார்க்கமாவன:
1. நற்காட்சி (ஸ்மயக் திருஷ்டி)
2. நல்லூற்றம், அஃதாவது நற்கருத்து (ஸம்யக் சங்கல்பம்)
3. நல்வாய்மை (ஸம்யக் வாக்கு)
4. நற்செய்கை (ஸம்யக் கர்மம்)
5. நல்வாழ்க்கை (ஸம்யக் ஆஜிவம்)
6. நல்லூக்கம், அஃதாவது நன்முயற்சி (ஸம்யக் வியாயாமம்)
7. நற்கடைப்பிடி (ஸம்யக் ஸ்மிருதி)
8. நல்லமைதி (ஸம்யக் சமாதி)
 
பஞ்ச சீலமாவது:
1. ஓருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றினிடம் அன்பாக இருத்தல்.
2. பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல்.
3. கற்புநெறியில் சிற்றின்பம் துய்த்தல்; அதாவது, முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
4. உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல்.
5. மயக்கத்தையும் சோம்பலையும் உண்டாக்குகிற மதுபானங்களை உட்கொள்ளாமை.
இந்தப் பஞ்ச சீலங்கள் இல்லறத்தார்க்கு உரியன. இவற்றோடு,
6. இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணல்.
7. பூ, சந்தனம், வாசனைச் சுண்ணம், எண்ணெய் முதலிய நறுமணங்களை நுகராமை.
8. பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல
என்னும் மூன்றையும் சேர்த்து அஷ்டசீலம் (எட்டு ஒழுக்கம்) என்பர்.அஷ்டசீலம் இல்லறத்தாரில் சற்று உயர்நிலை யடைந்தவர் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களாகும்.
இவற்றோடு,
9. இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணாதிருத்தல்.
10. பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாதிருத்தல்
ஆகிய இவை இரண்டும் சேர்த்து தசசீலம் (பத்து ஒழுக்கம்) எனப்படும்.

Labels:

சிறந்த எட்டு

புத்தர் வழியில் நாம் செல்வோமேயானால் கீழ்க் காணும் எட்டுப் பாகங்களையும் நாம் ஒருசேர வளர்க்க வேண்டும். அவை: சிறந்த கருத்து, சிறந்த நோக்கம், சிறந்த பேச்சு, சிறந்த நடத்தை, சிறந்த தொழில் வகித்தல், சிறந்த முயற்சி, சிறந்த 'விழிப்புடன் இருத்தல்', சிறந்த ஒருமுகச் சிந்தனை.

Labels:

பிறப்பும் இறப்பும் ஒன்றுதான்

 நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாதுமக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும்பிறப்பின் போது  மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கைஅழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இறப்பில்லை யல்லவா?

Labels:

Wednesday, February 24, 2010

கபிலர்.

"சுடர்த் தொடீஇ, கேளாய்-தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து,வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி,மேலோர் நாள்,
அன்னையும் யானும் இருந்தோமா, "இல்லீரே
உண்ணுநீர் வேட்டேன்" என வந்தாற்கு,அன்னை
'அடர்பொன் சிரகத்தால் வாங்கிச் சுடர் இழாய்,
உண்ணுநீர் ஊட்டிவா'என்றாள்;என,யானும்
தன்னை அறியாது சென்றேன்,மாற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
'அன்னாய்,இவன் ஒருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத், தன்னை யான்
'உண்ணுநீர் விக்கினான்'என்றேனா,அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மாற்று என்னைக் கடைக்காணல்
கொல்வான்போல் நோக்கி,நகைக்கூட்டம்
செய்தான்,அக் கள்வன் மகன்"

விளக்கம்

மிகுந்த நாணம் கலந்த சொற்களில்,தன் காதலன் செய்த காதல்விளையாட்டை,அன்போடும் பெருமிதத்தோடும் சொல்கிறாள் காதலி..

"சிறுவயதில் மணற்பரப்பில் பந்தை வைத்து விளையாடி இருக்கிறேன் அவனோடு,என்ன செய்தான் தெரியுமா ஒரு நாள்?, நானும் என் தாயும் வீட்டிற்குள் இருந்தோம், "வீட்டில் யாரும் இல்லியா?கொஞ்சம் குடிக்க தண்ணீர் வேண்டும்"என்று சத்தம் கொடுத்தான்.உடனே என் தாயும்,தங்கக் குவளையில் தண்ணீரை எடுத்துக் கொடுத்து,"மகளே நீரைக் கொடுத்துவிட்டு வா"என்று அனுப்பினாள்.நானும் யார் எவர் என்று தெரியாமல் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்தாள்..இவன் நிற்கிறான்.நான் கொடுத்த தண்ணீரை வாங்கிக்கொண்டே என் கையை வளையல்களோடு சேர்த்து அழுத்தினான். "அம்மா இங்கேபார்" என்று கத்தி விட்டேனா..அதைக் கேட்ட தாய் பயந்து அலறி என்னவென்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தாளா..நான் சுதாரித்து,தண்ணீர் குடித்ததும் விக்கினான் என்று சொல்லிச் சமாளித்தேன்.உடனே என் தாய் அவன் முதுகை அன்போடு நீவி விட்டு ஒன்றுமில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, என் அன்னை பார்க்கத அந்தத் தருணத்தில் அவன் என்னைப் பார்த்து கடைக்கண்ணால் சிரிக்கிறான்,திருட்டுப்பயல்.."

எவ்வளவு அருமையான நிகழ்வு? அந்தக் காதலிக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்..காதல்.

 


Labels:

கம்பர்

பாடல்.

வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்
 
விளக்கம்.


மெல்லிய இடையைக் கண்ட வஞ்சிக்கொடியானது வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள,நடையழகைப் பார்த்ததும் அன்னப்பறவைகள் பயந்து ஒதுங்கிக்கொள்ள,கால்களைப் பார்த்து வெட்கி தாமரை நீருக்குள் மறைந்து கொள்ள,கண்களைக் கண்ட மீன்கள் ஓட,பஞ்சை விட மென்மையான பாதங்களை உடைய சீதை நீராடினாள்.

பாடலின் சிறப்பு

சீதை நீராடும் அழகை வர்ணிக்கும் பாடல் என்பதனால், தண்ணீரில் காணப்படும் வஞ்சிக்கொடி,அன்னம்,தாமரை,மீன்கள் போன்றவற்றை மட்டுமே பாடுபொருளாக எடுத்தாண்டதே கம்பரின் சிறப்பு.அவையனைத்தும் சீதையின் அழகைப் பார்த்து தோல்வியடைந்ததாக அற்புதமான கற்பனையாக கையாண்டது.
 
 

Labels:

ஓரம்போகியாரின் பாடல்

நெய்தலில் தலைவி பாடுவதாக இருக்கும் அந்த பாடல்...

பைங் காற் கொக்கின் புன் புறத்தன்ன‌
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை!
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே.


ஓரம்போகியாரின்  பாடல்
 
" வெண்மையான முதுகையுடைய கொக்கின் நிறத்தை ஒத்த ஆம்பல் பூக்கள் குளத்தில் மலர்ந்திருப்பதை பார்த்தால் மாலை வேளை வந்து விட்டது தெரிகிறது.. அதைவிட மகிழ்ச்சி தரக்கூடியது என்ன வென்றால் அந்த மாலைக்குப் பிறகு இரவு வந்துவிடும் என்பதே"
 

Labels:

குறுந்தொகை3

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு

குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்
அவர்திறந்து இரங்கும் நம்மினும்
நம் திறந்து இரங்கும்,இவ் அழுங்கல் ஊரே.

புலவர்: பெருங்கண்ணன்.. முல்லைத் திணை பாடல்
 
 
நகக் கீற்றென் இருக்கும் நிலவுக் கீறல் வளர்ந்து,வளர்ந்து முழுநிலவாய்,பெளர்ணமிப் பந்தாய் வான்வெளியில் உருள்கிறதே.. அதுபோலத்தான் என்காதலும் காமமும்.. மெல்லிதாய் பூத்து,வல்லியதாய் வளர்ந்து,காமப் பந்தாய்உருண்டு, என்னை உருட்டி,உழுக்கி பின் கை வளையல்கள் கூட நெகிழ்ந்து விழும்அளவு என்னை உருக்கி விட்டது..அவரின் அருகாமைச் சுகம் அற்றுப்போனதால் மரம்தப்பிய கசங்கிய இலைபோல ஆகிவிட்டேன். என் தலைவனின் தீண்டல் இல்லாமல்துவண்டு போன என் நிலை கண்டு வானம் கூட அழுது மழையாய் பொழிகிறதே.. என் காதல் தலைவனின் காதல் விளையாட்டுகள் இல்லாமல் வாடிப்போய் வருந்தும்என்னைவிட என் மேல் இரக்கம் கொண்டு எனக்காக இந்த ஊர் மக்களும்வருந்துகிறார்களே...

 

Labels:

குறுந்தொகை2

 
 
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது,கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று,அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.


(காமம் செப்பாது: பொய் சொல்லாது, எயிற்று: பல், அரிவை:பெண், நறியவும்:வாசனை( நாற்றம்:வாசனை.)


தலைவனின் கூற்றாக குறிஞ்சித்திணையில் இறையனார் இயற்றியது
 
விளக்கம்:

"அங்கும் இங்குமாய் தேடித்தேடி தேன் பருகும் வண்டே, நீ பார்த்தவற்றை மறைக்காமல், பொய் சொல்லாமல் சொல். மயிலைப் போல அழகான,வரிசையான பற்களை உடைய, அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்து வரும் நறுமணத்தைவிட அதிக வாசனை உள்ள மலரை நீ பார்த்திருக்கிறாயா என்று சொல்"
 
 

Labels:

குறுந்தொகை

குறுந்தொகை:
 
பாடல்:

கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்

பலர் புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை ! நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்று இது தமியோர்மாட்டே.

முல்லைத் திணையில் புலவர் கருவூர்ப் பவுத்திரன் என்ற புலவரால் எழுதப்பட்ட  பாடல் இது.
 
விளக்கம் :

"கார் இருள் தென்படத்துவங்கும் மாலை வேளை வந்துவிட்டால், பணிகளை முடித்து எல்லோரும் தத்தம் வீடு திரும்பத் துவங்கும் இந்த வேளையில் முல்லை மலரே, உன் மொட்டுக்களை விரித்து இருப்பது,என்னைப்பார்த்து,என் தனிமையைப் பார்த்து புன்னகைத்து கேலி செய்வது போல உள்ளது.. இது நியாயமா, தகுமா இப்படித் துணையைப் பிரிந்து தனியாக இருப்பவர்களைப் பார்த்து சிரிப்பது?, வாழ்க நீ"

என்று தலைவனின் கூற்றாக, அவனின் புலம்பலை பதிவு செய்துள்ளார்.
 
 

Labels:

தூங்கியது யார்

"நான் தூங்கிவிட்டேன்என்பதில் தூங்கியது யார் ?என் கண்ணா அல்லது நானா ? இவைகளெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நம்க்குவிடைக்கிடைக்கும் - viveka soodaamani

Labels:

விவேக சூடாமணி

எது தீமையில்  முடிவது?        அகந்தை 

எது மகிழ்ச்சியைக் கொடுப்பது? ..நல்லவர்களின்  நட்பு 

மரணத்தைக் காட்டிலும்  கொடியது எது?     வஞ்சகம் 

முயற்சி  செய்து பெறுவது எது?       கல்வி    

விலை மதிப்பிட முடியாதது,,எது?,,,,,சமயத்தில்  செய்யும் உதவி 

துயரங்களை அழிக்க வல்லவர் யார்?        அனைத்தையும்   துற்க்க வல்லவர் 

எவைகளை  அலட்சியம் செய்யவேண்டும்?    தீயோர்  பிறர்  உடமை    மற்றான்  மனவி

உலகை  வெல்பவன் யார் ?    சத்தியமும்  பொறுமையும்  கொண்டவன் ,,,

பார்வை  அற்றவன்  யார்  ?கற்றபின்னும் தீமைகளிலேயே  உழல்பவன்   ,,,

செவிடன்   யார் ?   நல்லவற்றை கேளாதவன்  செவிடன் 

யார்  நண்பன்?   தீயச் செயலகளிலிருந்து  நம்மைத் தடுப்பவன் 

பேச்சுக்கு   அழகு தருவது  எது ?   சத்தியம்

நாம் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியது  எவை ?நற்சிந்தனை   நலொழுக்கம் 

மகிழ்ச்சியுடன் ஆற்றும் பணிகள் எவை?நலிந்தோர்பால் இரக்கம்  கொள்ளல்  ஈதல்  

சத்சங்கத்துடன் சேருதல் ,

யார் முன்னால் தெய்வம் பணிந்து நிற்கும் ?    ஜீவ காருண்யம் மிக்கவனிடம்  தெய்வம்

பணிந்து நிற்கும் ,,,,,,,,,

 
-விவேக சூடாமணி

Labels:

காலஎந்திரம்

காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது. சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும். அவற்றை நினைவுகள் என்போம். சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும். அவற்றைக் கனவுகள் என்போம்.

Labels:

Tuesday, February 23, 2010

கட உபநிடதம்

"ஆழ்ந்த தூக்கத்தின் போதும் நம்மில் யாரோ ஒருவர் விழித்திருந்து நாம் ஆழ்ந்து தூங்குவதைக் கவனிக்கிறார்.அதனால் தான் விழித்ததும் "நான் நன்றாகத் தூங்கினேன்" என்று சொல்ல முடிகிறது. ஆழ்ந்த தூக்கத்திலும் சரி, கனவிலும் சரி, விழிப்பிலும் சரி அந்த ஒருவர் விழித்திருப்பதால் தான் நாம் அனைத்தையும் உணர முடிகிறது.அந்த ஒருவரே ஆன்மா . அதுவே நீ "   - எம தர்மன் நசிகேதனிடம் உரைத்தது (கட உபநிடதம் )

Labels:

மழை

முகிலினங்கள்(மேகங்கள்) அலைகிறதே முகவரிகள் தவறியதோ
முகவரிகள் தவறியதால் அழுகிறதோ அது மழையோ - வைரமுத்து

Labels:

Monday, February 22, 2010

மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை,

பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு,
மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார்
மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை,
அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்"-தம்மபதம்

Labels:

ஈசனைக் காட்டும் உடம்பு

மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால்
 ஈசனைக் காட்டும் உடம்பு - அவ்வை

Labels:

அழகிய மலர்கள் எல்லாம் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும்

அழகிய மலர்கள் எல்லாம்  தலை கவிழ்ந்து நிலம் நோக்கும்:
 
அழகிய மலர்கள் எல்லாம் காணும் சக்தி பெறுமாயின் அவளின் கண் அழகுக்கு  ஈடாக மாட்டோம் என்று நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் - திருவள்ளுவர்

Labels:

முயற்சி

முயன்ற வரை செய்வது முயற்சி அல்ல
முடியும் வரை செய்வதே முயற்சி

Labels:

Windows Mobile application Error:

Windows Mobile application Error:
-----------------------------------------------------


For some applications, I am getting the following error :

Error in VS2005:
--------------------------
---------------------------
Microsoft Visual Studio
---------------------------
Unable to start program '\My Documents\TestApp\TestApp.exe'.

An error occurred that usually indicates a corrupt installation (code 0x8007007e). If the problem persists, repair your Visual Studio installation via 'Add or Remove Programs' in Control Panel.
---------------------------
OK  
---------------------------


Result:

This is due to missing of any dependency files.

Solution:
   You can copy the dependency files and then check once again.

Sometimes, if msvcr80.dll or msvcr80d.dll is referenced as a dependency in our exe/dependency files,
then this error might occurs.


To resolve this error, Project->Properties->Deployment->Additional files->

add the following lines:

msvcr80.dll|$(BINDIR)\$(INSTRUCTIONSET)\|%CSIDL_WINDOWS%|0;

 

Additional Files property is to copy the dependency files at the time of deployment.
The above code will copy the msvcr80.dll from our system to the target device(Windows Mobile device)'s windows folder.

 

 


 

Sunday, February 21, 2010

ஒளியானே உன்னருள் தந்தாய்

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய் தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய் குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய் நாயேனை நாளும் நல்லவனாக்க ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

Labels:

Friday, February 19, 2010

Words of Kalidasa

Dasaratha saw many beasts as he was hunting. Although he saw a peacock fly very close to his chariot, he did not shoot his arrow. For, as the peacock spread its tail feathers before him, it reminded him of his wife's hair adorned with flowers of different kinds and how it would become disarranged during their lovemaking.

Thursday, February 18, 2010

ஆத்மா

கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"

ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:
"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.
அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"

பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."

Labels:

ரமண மகரிஷியின் அருளுரை

ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் மூலத்திற்கே கொண்டு செல்லுங்கள். எண்ணங்கள் மேன்மேலும் ஓட அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அதற்கு முடிவே இல்லை. மறுபடியும் மறுபடியும் உற்பத்தி ஸ்தானத்திற்கே அழைத்துச் சென்றால் மனம் செயலற்று இறந்து போகும்.

* சித்திகள் உண்மையான ஞானத்தின் அடையாளமல்ல. சமத்துவமே உண்மையான ஞானத்தின் அடையாளம். சமத்துவம் என்பது வேறுபாடுகளை மறுப்பதன்று. மாறாக ஒன்று படும் ஏகத்துவத்தை உணர்தல்.

* மூலமாம் இதயத்தில் அகந்தை கரைதலே உண்மையான சரணாகதி. வெளிச்செயல்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் பார்ப்பதெல்லாம் இன்னும் எவ்வளவு அகந்தை பலமாக எஞ்சி நிற்கிறது என்பதும், எவ்வளவு அழியும் நிலையிலிருக்கிறது என்பதும் தான்.

* ஆத்மஞானத்தையே நான் வலியுறுத்துகிறேன். நம்மை அறிந்த பின்னரே உலகையும் கடவுளையும் அறிதல் வேண்டும்.... ஆத்மாவைத் தேடி ஆழ்ந்துசெல்லச் செல்ல உண்மை ஆத்மா உங்களை உள்ளிழுக்கக் காத்திருக்கிறது. பின் செய்ய வேண்டியவற்றை எல்லாம் வேறு ஏதோ ஒன்று செய்கிறது. உங்களுக்கு அதில் பங்கு இல்லை.

Labels:

உருவற்று நிற்கும் உடம்பு

உருவந் தழலாக உள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார்
புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கும் உடம்பு  - அவ்வையார்

Labels:

ஒளி

விண்ணிறைந்து நின்ற பொருளே உடம்பதன்
உண்ணிறைந்து நின்ற ஒளி.
- அவ்வையார்

Labels:

ஈசனைக் காட்டும் உடம்பு

மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு - அவ்வையார்

Labels:

Wednesday, February 17, 2010

கனவுகளின் காதலன்

உன்னுடன் நனைந்த முதல் மழையை
வானத்தைப் பார்த்து
நான் ரசிக்க
எதிர்பாராமல் நீ கொடுத்த
அந்த முதல் முத்தம்
            ... இன்றும் ஈரமாக
என் கன்னத்தில் 
இப்படிக்கு ,
கனவுகளின் காதலன்

Labels:

முதல் மழை

உன்னுடன் நனைந்த முதல் மழையை
வானத்தைப் பார்த்து
நான் ரசிக்க
எதிர்பாராமல் நீ கொடுத்த
அந்த முதல் முத்தம்
            ... இன்றும் ஈரமாக
என் கன்னத்தில் .

Labels:

Tuesday, February 16, 2010

என் கன்னத்தில்

  உன்னுடன் முதல் மழையை
வானத்தைப் பார்த்து
நான் ரசிக்க
எதிர்பாராமல் நீ கொடுத்த
அந்த முதல் முத்தம்
            ... இன்றும் ஈரமாக
என் கன்னத்தில் .

Labels:

கடிதங்களுக்கு தபால் தலை ஒட்டாதே

காதலியே
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு அவர்கள்
ஓங்கிக் குத்துவதைத் தாங்க முடியாது - கோகுல்

Labels:

விரதம்

பிற உயிர்களைத் துன்புறுத்தாமையே விரதங்களில் எல்லாம் சிறந்த விரதம் ஆகும் - அவ்வையார்

Labels:

அருள் செய்

எனக்கு என்னை அறிவித்து எனக்கு அருள் செய் - அவ்வையார் (விநாயகர் அகவல்)

Labels:

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;

 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே! - திருமூலர்

Labels:

Monday, February 15, 2010

Google Desktop

திருமந்திரம் 725

உடம்பினை முன்னும் இழுக் கென்றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்

றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.

திருமந்திரம் 725
 எவ்வளவு அழகாக, அழுத்தமாக, ஆணித்தரமாக இங்கு சித்தர் நெறி பேசப்படுகிறது.  அதுவும் திருமுலர் பிரானால்.

 மாந்தர்களே! உங்களைப் போல் நானும் இந்த உடல் ஓட்டைப் பாண்டம்  ஒன்றுக்கும் உதவாதது என்றுதான் இருந்தேன்.  ஆனால் இந்த உடம்புக்குள்ளேதான். இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டேன்.

Labels:

உன்னைக் காதலித்துக் கொண்டிருப்பேன்

உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.

Labels:

Friday, February 12, 2010

சாமர்த்தியமற்றவன்

கணேசனைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதாயின் அவன் சாமர்த்தியமற்றவன். அதனால் அசடாக கருதபடுகிறான். சாமர்த்தியம் என்ற சொல்லின் உள்ளே திறமை என்பதையை தாண்டிய தந்திரம் ஒன்று உள்ளது. அதை உருவாக்கிக் கொள்வதன் வழியே வாழ்வில் வெற்றியை அடைவதே பெரும்பான்மையினரின் குறிக்கோள். அதில் பலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கணேசன் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்ளவேயில்லை. கவனமாக விலக்கிப் போகிறான்.

அவன் வாழ்வைப் பரிகசிக்கிறான். அதனிடமிருந்து எதையும் அவன் யாசிக்கவில்லை. பல நேரங்களில் தெரிந்தே தோற்றுப்போகிறான். அதற்கு நிறைய மனத்துணிச்சல் வேண்டும். மற்றொன்று வாழ்வை கண்டு பயங்கொள்ளாத போராட்ட குணம் வேண்டும். இரண்டும் அவனிடமிருக்கிறது.

அதை அவன் தனது லௌகீக வாழ்க்கைக்கு உரியதாக மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கான எத்தனிப்பே அவனிடம் இல்லை. அந்த வகையில் அவன் ஒரு துறவி. ஆனால் வாழ்க்கை நெருக்கடிக்களுக்குள்ளாகவே அவன் தன் துறவுத்தன்மையை அடைந்துவிட்டான். அதை ஒரு போதும் வெளிப்படுத்திக்  கொள்ளவில்லை.

Labels:

Chennai bus routes

கவிதை

எழுதும் கவிதையில்
எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

Labels:

காதல் சிலுவை

படம் : சுப்ரமணியபுரம்
இயக்கம் : சசிகுமார்
இசை : ஜேம்ஸ்வசந்தன்
பாடல் : யுகபாரதி
குரல் : சங்கர் மகாதேவன்

பல்லவி

காதல் சிலுவையில்
அரைந்தாள் என்னை
தீயின் குடுவையில்
அடைத்தாள் கண்ணை

கனவுகளில் விழுந்த எனை
கவலையிடம் அனுப்புகிறாள்

இளமை எனும் கருவரை எங்கும்
எரிதழலை கொளுத்துகிறாள்

உயிருதிரும்போது
உறவுகளும் வீணோ
உலகம் இது தானோ

சரணம் : 01

கழுகளின் கண்களிலே
மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை
செவி உணர வாய்ப்பில்லை

புழுதியிலே ரத்தினமாய்
இருந்தது ஒரு தொல்லை
பாவங்களைப் பாராமல்
பழகியதனால் தொல்லை

தேவை பூமியை தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்

சரணம் : 02

அவளுடைய கற்பனையை
எழுத வழி இல்லை
கூண்டுக் கிளி நான் ஆனேன்
வெளி வரவும் வாய்ப்பில்லை

இவனுடைய உன்மைகளை
உளர வழி இல்லை
தோல்விகளின் வீடானேன்
துணை வரவும் ஆளில்லை

வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீவு

Labels:

Thursday, February 11, 2010

ஆண்டவனுக்கும் குடும்பக் கட்டுப்பாடு

அனாதைகள் ஆண்டவனின் குழந்தைகள் என்றால் ஆண்டவனுக்கும் குடும்பக் கட்டுப்பாடு - கமல் ஹாசன்

Labels:

உன்னை, நான் அறிவேன்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

யார் இவர்கள் மாயும் மானிடர்கள்!
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை!
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்

Labels:

முயற்சியின் எல்லை

"முயற்சியின் எல்லை எதுவரை என்றல்? 
முயற்சி என்பது தோற்பதுவரை அல்ல ஜெயிப்பதுவரை

Labels:

முயற்சியின் எல்லை




"முயற்சியின் எல்லை எதுவரை?  ...
 
முயற்சி என்பது தோற்பதுவரை அல்ல ஜெயிப்பதுவரை

Labels:

நற்றுணையாவது நமச்சிவாயமே

கற்றுணைப் (கல் தூணைப்) பூட்டியோர் கடலிற்
 பாய்ச்சினும் நற்றுணையாவது (நல் துணை) நமச்சிவாயமே - அப்பர்

Labels:

தேடிக் கண்டு கொண்டேன்

தேடிக் கண்டு கொண்டேன் திருமாலோடு நான்முகனும்
தேடிக் காணாத தேவனை என்னுள்ளே கண்டு கொண்டேன் -அப்பர்

Labels:

நொடி நிமைக்கும் நேரமல்லோ

நொடி நிமைக்கும் (இமைக்கும்) நேரமல்லோ மனிதர் வாழ்க்கை
நுண்ண்மையைப் பார்த்தறிந்து நுடங்குவாய் (அடங்குவாய்) நீ
செடியில்லாக் கொடி போலே  யலைய வேண்டாம்
சிந்தையுள்ளே ஐம்புலனையடைத்துப் பாரே !

Labels:

புகழான மௌன நிலை



இகழ்ந்திட்ட மனிதரோடு வாய் பேசாமல்
எப்போதும் வேதாந்தத் துறையில் நில்லு
தினமான நாள்தோறும் மௌன தீக்ஷை
சிறுபிள்ளை செய்தாலும் சித்தியாகும் 
புகழான மௌன நிலை பூசை மார்க்கம்
கடினமென்று தள்ளாதே மௌன யோகம்

Labels:

படைத்தவன் தன்னைப் பார்

அடைத்திட்ட வாசலின் (புருவ மத்தி) மேல் மனம் வைத்துப்
படைத்தவன்  தன்னைப் பார் - அவ்வை

Labels:

ஐயன் வந்து மெய்யகம்

ஐயன் (உண்மை) வந்து மெய்யகம் (உடம்பினுள்) கோயில்
கொண்டமர்ந்த பின் வையகமதில் (உலகத்தில்) மாந்தர்
முன்பு வாய் திறப்பதில்லையே -சிவ வாக்கியர்

Labels:

இகழ்ந்திட்ட மனிதரோடு

இகழ்ந்திட்ட மனிதரோடு வாய் பேசாமல்
எப்போதும் வேதாந்தத் துறையில் நில்லு
தினமான நாள்தோறும் மௌன தீக்ஷை
சிறுபிள்ளை செய்தாலும் சித்தியாகும் 

Labels:

கடவுள்

ஒவ்வொரு மனிதனும் கடவுள் நிலையை அடைய முடியும் . இறைவன் நம்மில் இருக்கின்றான் , நம் அன்றாட வாழ்வில் அவனை காண முடியும் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஆர் எனின்

'கற்றதனால் ஆய பயனென்' என்று நமது 'இயல்பு' நிலையை சொல்லி - இறைவனின் தாளை(திருவடி) வணங்கினால் வால் அறிவனை அடையலாம் என்ற மேன்மை நிலையை சொல்கிறார். வாலறிவன் என்பது infinite intelligence என்று கொள்ளலாம். நாம் கற்பது அளவுடையது. அது நமது இயற்கை. ஆனால் இறையின் பண்பு - வால் அறிவு . அளவுடைய அறிவில் இருந்து வால் அறிவிற்கு நாம் செல்ல அவன் திருவடியை பணிந்தால் போதும்.


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

நன்மை- தீமை , இன்பம்- துன்பம் என்று எதிர்மைகளை கொண்டதே நம் வாழ்க்கை. இறைவனின் பொருள்(மெய்ப்பொருள்) மேன்மையானது. நம்முடைய ஒவ்வொரு செயலும்(புகழ் புரிதல்) மெய்ப்பொருளை சார்ந்து அமைந்தால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மை பாதிக்காது.
இருள்சேர் இருவினை - நம் வாழ்வின் 'இயல்பு'
இறைவன் பொருள் - மெய்ப்பொருள் - இறையில் பண்பு
இறைவன் பொருள்சேர் புகழ் புரிதல் - நம்மை இவ்வாழ்வின் 'இயல்பிலிருந்து' விடுவித்து இறையில் பண்பை நம்மிடம் வளர்க்கும்.

Labels:

கடுவெளிச் சித்தர் பாடல் # 6

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்ல வழிதனை நாடு - நல்ல வழிகளான சாதுகளின் நட்ப்பை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு - நாளொரு வண்ணம் பரமனான அந்த ஈசனை தேடு.
வல்லவர் கூட்டத்திற் கூடு - வல்லவர் கூட்டமான சித்தர்கள், யோகபுருஷர்களுடன் கூடு,
அந்த வள்ளலை - அந்த ஈசனை
நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. - எப்போதும் நெஞ்சினில் ஓர் ஆலயம் செய்து அவ் ஆண்டவனை வாழ்த்தி கொண்டாடு.

Labels:

தவமும் தவமுடையாருக்கு ஆகும்

மனித பழக்கவழக்கங்களை ஆராய்ந்தவர்கள் எந்த ஒரு புது பழக்கமும் 21 நாள் சவாலை( 21 day challenge) வெல்லுகிறதா என்று பார்க்க சொல்லுகிறார்கள். ஆதலால் தான் தவம் 'கடினம்'. காலையில் 4.30 மணிக்கு எழுந்து உடல்பயிற்சி செய்யவேண்டும் என்று அலாரம் வைப்பேன். ஆனால் 4.30 மணிக்கு எழுந்து அலாரத்தை அமுக்கிவிட்டு திரும்பித் தூங்கி விடுவேன் !!!.

தவமும் தவமுடையாருக்கு ஆகும் - அவம் அதனை
அஃதிலார் மேற் கொள்வது. [ தவம் 27 : 2 ]

தவத்தின் எதிரி அவம். அவையங்களின் ( ஐந்து புலன்களின்) விருப்பபடி நடப்பது அவம். அப்படி நடக்காமல் உறுதியுடன் தவமிருத்தல் , கொடுப்பினையும் உறுதியும் இருந்தால் மட்டுமே முடியும்.

இலர் பலராகிய காரணம், நோற்பார்
சிலர் பலர் நோலாதவர் [ தவம் 27 : 10 ]

இவ்வுலகத்தில் இல்லை என்போரே பெரும்பாலோர் உள்ளனர். என்ன காரணம் ? நோற்பார்( தவம் செய்வோர், உறுதியுடன் நோன்பு கடைபிடிப்போர் ) சிலராகவும், அவையங்களின் கட்டுப்பாடில் பலராகவும் இருப்பதால் தான். வெற்றிக்கு இதைவிட சிறந்த இரகசியம் உளதா ?

Labels:

தவம்செய்வார்

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் - மற்றல்லார்
அவம் செய்வார் ஆசை உட்பட்டு. [ தவம் 27 : 6 ]

தவம் செய்வதால்(துன்பம் பொறுத்தல்; உயிர்களுக்கு தீங்கு செய்யாமை - தவம் 27:1) நம் கருமவினைகளை நீக்க முடியும். அப்படி அல்லாமல், புலன்களின் ஆசைக்கு உட்பட்டவர்கள் அவம் செய்பவர்கள்.

Labels:

வினை செயல்வகை

ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே - ஒல்லாக்கால்
செல்லும் வாய்நோக்கிச் செயல்.  [ வினை செயல்வகை 68 : 3 ]

அனைத்து வழிகளிலும் முயன்று செயல்படு.  முடியவில்லை என்றால், மாற்று வழியில் செயல்படுத்து !

Labels:

சிறப்பீனும் செல்வம் பெறினும்

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள். [ 32 : 1]
{ The aim of the sinless One consists in acting without causing sorrow to others, although he could attain to great power by ignoring their feelings. }

Labels:

கடுவெளிச் சித்தர் பாடல் # 23

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இந்த உலகமே பாசம், பந்தம் மற்றும் பல இன்னல்கள் கொண்ட ஒரு முள். சற்றும் இச்சை வைக்காமல் ஒவ்வொரு நாட்களையும் வாழ்வாய். சத்திய வெள்ளமான அந்த பரம்பொருள்ளை மொள்ளு (ஏந்திக்கொள்). உன் சிந்தனை என்றும் திகட்டாமற்கொள்.

Labels:

கடுவெளிச் சித்தர் பாடல் # 26

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே.

Labels:

பாடையேறினும் ஏடது கைவிடேல்

"பாடையேறினும் ஏடது கைவிடேல்"

Labels:

Wednesday, February 10, 2010

சிதையா நெஞ்சு கொள்;

சிதையா நெஞ்சு கொள்;
செய்வது துணிந்து செய்;
தோல்வியில் கலங்கேல்;
நூலினைப் பகுந்துணர்;
நாளெல்லாம் வினை செய்;
  -மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Labels:

பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே

பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே

Labels:

ஒன்றாகக் காண்பதே காட்சி

ஒன்றாகக் காண்பதே காட்சி ;புலன்ஐந்தும்
வென்றான்தன்  வீரமே வீரமாம்- என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப் பிறர்
ஏவாமல் உண்பதே ஊண் -அவ்வையார்

Labels:

Alcohol

"Alcohol is the human beings worst enemy,But Bible Says Love your enemy"

தலைவன் தலைவியைப் புகழ்தல்

விவேக சிந்தாமணி
 
10.தலைவன் தலைவியைப் புகழ்தல்

வண்டுமொய்த் தனையகூந்தல் மதனபண்டாரவல்லி
கெண்டை யோடொத்த கண்ணாள் கிளிமொழி வாயினூறால்
கண்டுசர்க் கரையோதேனோ கனியொடு கலந்தபாகமோ
அண்டர்மா முனிவர்க்கெல்லா மமுதமென் றளிக்கலாமே.

வண்டுகள் மொய்த்திருப்பதுபோன்ற கூந்தலை உடையவள், காமக் கருவூலம், கெண்டை மீன்போன்ற கண்ணாள், கிளிமொழியாள். இவளின் இதழ்நீர், கல்கண்டோ, சர்க்கரையோ, தேனோ, கனிப்பாகோ அறியேன். இதை தேவர், மாமுனிவவர்க்கெலாம் அமுதம் எனக் கொடுக்கலாம்

Labels:

Tuesday, February 09, 2010

ஆத்திசூடி

 

அறம் செய விரும்பு Desire doing righteous deeds
ஆறுவது சினம் Anger is to be controlled
இயல்வது கரவேல் Never stop learning
ஈவது விலக்கேல் Don't prevent charity (Always be charitable)
உடையது விளம்பேல் Avoid injurious words
ஊக்கமது கைவிடேல் Don't give up hope
எண் எழுத்து இகழேல் Don't despise learning
ஏற்பது இகழ்ச்சி Accepting alms is despicable
ஐயமிட்டுண் Eat after donating (to the needy)
ஒப்புர வொழுகு Act virtuously
ஓதுவது ஒழியேல் Don't give up teaching (scriptures)
ஒளவியம் பேசேல் Don't carry tales

Labels:

உடம்பினுள் உத்தமர் காண்

உடம்பினால் ஆய பயனாதலின் 
உடம்பினுள் உத்தமர் காண் -அவ்வை  

Labels:

வாழ்க்கை

வாழ்க்கையில் எங்காவது ஒரு இடத்தில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால் சற்றும் மனம் தளராதீர்கள். அது நல்லது. வெற்றி பெற்றுக் கொண்டே வருவது பெரிதல்ல. அதனால் நமக்கு எந்தப் பயனும் உண்மையில் கிடையாது.

வெற்றி நமக்கு எதையும் கற்றுத் தராது. மாறாக தோல்விதான் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தரும்.-ஷாருக் கான்

Labels:

Monday, February 08, 2010

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாக்கு

ஸ்ரீராமகிருஷ்ணரின்     வாக்கு: -   ஞானம்  என்பது    பிரம்மத்தின்    வாசல்  திண்ணைவரை  போகும்.   பக்தி   பிரம்மத்தின்   அந்தப்புரம்  எல்லாம்  போய்  வளையவரும்.

Labels:

பக்தி

ஸ்ரீகிருஷ்ணனும்    விவரமானவன்தான்.   'ஞானத்தைத்  தருகிறேன்.    முக்தியைத்  தந்து  விடுகிறேன்.  ஆனால்    பக்தி.....   என்றால்    கொஞ்சம்  வேறு  வேலை  இருக்கிறது.  அப்புறம்  பார்ப்போமே!'    என்று  சொல்லி  விடுகிறான்

Labels:

Sunday, February 07, 2010

difficult to control

"it is easy to control an elephant, catch hold of the tiger's tail, grab the snake and dance, dictate the angels, transmigrate into another body, walk on water or sit on the sea; but it is more difficult to control the mind and remain quiet". - Thaayumaanavar

சிந்தை செய்வீர்

சிந்தை செய்வீர் சிந்தை செய்வீர்
சிந்தைக்கு அடங்காத பொருளைச் சிந்தை செய்வீர் -தாயுமானவர்

Labels:

Thursday, February 04, 2010

வெற்றி

வெற்றி எப்பவுமே உன்னை தனிமையில் தான் முத்தமிடும். ஆனால் தோல்வி எப்பவுமே பொதுவில் வைத்துதான் முகத்தில் அறையும் அது தான் வாழ்க்கை.. சொன்னது யார் - யாருக்கு தெரியும்??

Labels:

அவள்

அவள் மீது நான் கோபப்படும்போது என்னை நான் வெறுக்கிறேன் .
என் மீது அவள் கோபப்படும்போது அவளை நான் ரசிக்கிறேன் .

Labels:

முதல்ல

முதல்ல கிணத்த காணலேம்ப, பிறவு நிலத்த காணலேம்ப, பிறவு , ஊற காணலேம்ப, பிறவு உன்னையே காணலேன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவ

Labels:

Wednesday, February 03, 2010

போராட்டம்

வாழ்க்கையே அர்த்தமில்லாத ஒரு போராட்டம்தானோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது

Labels:

பெண்

"பெண் தாய்மையின் வடிவம். அவளை ஒழுக்க நியதிகளால் அளக்க முடியாது. அவளை அவள் பெற்ற குழந்தைகளினாலான கலாச்சாரம் ஒரு போதும் மதிப்பிட்டுவிட முடியாது; நதியை மரங்கள் அளந்து விடமுடியாது என்பதைப் போல…." -பைரப்பா

Labels:

காலத்தைக் கடந்து ...

புறப்பாதிப்புகளை நிராகரித்து தனக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தன்மையைப் பின்பற்றுபவனே காலத்தைக் கடந்து நிற்கிறான் .

Labels:

Tuesday, February 02, 2010

Follow your instincts. That's where true wisdom manifests itself

Follow your instincts. That's where true wisdom manifests itself

safe

Ship's in harbor are safe, but that's not what ships are built for..!!