Wednesday, February 24, 2010

குறுந்தொகை2

 
 
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது,கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று,அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.


(காமம் செப்பாது: பொய் சொல்லாது, எயிற்று: பல், அரிவை:பெண், நறியவும்:வாசனை( நாற்றம்:வாசனை.)


தலைவனின் கூற்றாக குறிஞ்சித்திணையில் இறையனார் இயற்றியது
 
விளக்கம்:

"அங்கும் இங்குமாய் தேடித்தேடி தேன் பருகும் வண்டே, நீ பார்த்தவற்றை மறைக்காமல், பொய் சொல்லாமல் சொல். மயிலைப் போல அழகான,வரிசையான பற்களை உடைய, அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்து வரும் நறுமணத்தைவிட அதிக வாசனை உள்ள மலரை நீ பார்த்திருக்கிறாயா என்று சொல்"
 
 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home