Wednesday, February 24, 2010

விவேக சூடாமணி

எது தீமையில்  முடிவது?        அகந்தை 

எது மகிழ்ச்சியைக் கொடுப்பது? ..நல்லவர்களின்  நட்பு 

மரணத்தைக் காட்டிலும்  கொடியது எது?     வஞ்சகம் 

முயற்சி  செய்து பெறுவது எது?       கல்வி    

விலை மதிப்பிட முடியாதது,,எது?,,,,,சமயத்தில்  செய்யும் உதவி 

துயரங்களை அழிக்க வல்லவர் யார்?        அனைத்தையும்   துற்க்க வல்லவர் 

எவைகளை  அலட்சியம் செய்யவேண்டும்?    தீயோர்  பிறர்  உடமை    மற்றான்  மனவி

உலகை  வெல்பவன் யார் ?    சத்தியமும்  பொறுமையும்  கொண்டவன் ,,,

பார்வை  அற்றவன்  யார்  ?கற்றபின்னும் தீமைகளிலேயே  உழல்பவன்   ,,,

செவிடன்   யார் ?   நல்லவற்றை கேளாதவன்  செவிடன் 

யார்  நண்பன்?   தீயச் செயலகளிலிருந்து  நம்மைத் தடுப்பவன் 

பேச்சுக்கு   அழகு தருவது  எது ?   சத்தியம்

நாம் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியது  எவை ?நற்சிந்தனை   நலொழுக்கம் 

மகிழ்ச்சியுடன் ஆற்றும் பணிகள் எவை?நலிந்தோர்பால் இரக்கம்  கொள்ளல்  ஈதல்  

சத்சங்கத்துடன் சேருதல் ,

யார் முன்னால் தெய்வம் பணிந்து நிற்கும் ?    ஜீவ காருண்யம் மிக்கவனிடம்  தெய்வம்

பணிந்து நிற்கும் ,,,,,,,,,

 
-விவேக சூடாமணி

Labels:

0 Comments:

Post a Comment

<< Home