காசியின் சிறப்பு :
பல்லி கத்தாது
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம்.
சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம். ரமணர்
Labels: தமிழ்
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.
அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.-ரமணர்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
கவிதை:
அவ்வீட்டில்
திருடன் விட்டுச்சென்றது
பால்கனி நிலவு மட்டுமே.
ஒன்றுமில்லாத பாஷோவின் வீட்டில் எதைத் திருட திருடன் வந்தான் என்று தெரியவில்லை. இடிந்துபோன பாஷோவின் வீட்டில் திருட முடியாத நிலவு மட்டுமே இருக்கிறது. ஒன்றும் கிடைக்காத திருடன் பாஷோவிடம் திருட முடியாத நிலவு மட்டுமே உள்ளதைத் தெரிந்து நொந்துபோயிருப்பான் - S.Ramakrishnan
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பறக்க வேண்டுமென்ற உணர்வு இருக்க வேண்டும். வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய அது வழிவகுக்கும். நீ யாராக இருந்தாலும், எந்த கிராமத்தில் இருந்தாலும், உன்னால் வெற்றியடைய முடியும். நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உழைப்பால் அதை ஒரு நாள் அடைய முடியும்.எண்ணங்கள் பெரிதாக இருந்தால், செயல்கள் பெரிதாக இருக்கும். செயல்கள் பெரிதாக இருந்தால், வாழ்க்கை உயர்வாகும் என்பதை வள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். உங்கள் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்க வேண்டும். அதை அடைய உழைப்பு முக்கியம்.
உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் விடாமுயற்சி இருந்தால், வெற்றி உங்களை வந்து சேரும். வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உலகம் படிக்க வைப்பது, நமது கையில்தான் உள்ளது. எந்த மாயவலையிலும் விழமாட்டேன் என்ற உறுதி இருந்தால், வரலாற்றுப் பக்கத்தில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்.வாழ்வில் வெல்ல 5 விஷயங்கள் அவசியம். முதலில் லட்சியம் வேண்டும். அதை அடையக் கூடிய அறிவைத் தேடிப்பெற வேண்டும். அதற்கு கடும் உழைப்பு வேண்டும். பிரச்னைகளைக் கண்டு பயப்படக் கூடாது. பிரச்னைகளைத் தோல்வியடையச் செய்து, வெற்றியடைய வேண்டும். விடாமுயற்சி வேண்டும்; - அப்துல் கலாம்Labels: தமிழ்