Monday, October 17, 2011

அப்துல் கலாம்

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பறக்க வேண்டுமென்ற உணர்வு இருக்க வேண்டும். வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய அது வழிவகுக்கும். நீ யாராக இருந்தாலும், எந்த கிராமத்தில் இருந்தாலும், உன்னால் வெற்றியடைய முடியும். நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உழைப்பால் அதை ஒரு நாள் அடைய முடியும்.எண்ணங்கள் பெரிதாக இருந்தால், செயல்கள் பெரிதாக இருக்கும். செயல்கள் பெரிதாக இருந்தால், வாழ்க்கை உயர்வாகும் என்பதை வள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். உங்கள் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்க வேண்டும். அதை அடைய உழைப்பு முக்கியம்.

     உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் விடாமுயற்சி இருந்தால், வெற்றி உங்களை வந்து சேரும். வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உலகம் படிக்க வைப்பது, நமது கையில்தான் உள்ளது. எந்த மாயவலையிலும் விழமாட்டேன் என்ற உறுதி இருந்தால், வரலாற்றுப் பக்கத்தில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்.வாழ்வில் வெல்ல 5 விஷயங்கள் அவசியம். முதலில் லட்சியம் வேண்டும். அதை அடையக் கூடிய அறிவைத் தேடிப்பெற வேண்டும். அதற்கு கடும் உழைப்பு வேண்டும். பிரச்னைகளைக் கண்டு பயப்படக் கூடாது. பிரச்னைகளைத் தோல்வியடையச் செய்து, வெற்றியடைய வேண்டும். விடாமுயற்சி வேண்டும்; - அப்துல் கலாம்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home