எது மேலான தானம்?
ஆறில் ஒரு பங்கு' என்ற சொற்றொடர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவனுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைத்தான் தனக்கென்று வைத்துக்கொள்ள வேண்டும். மீதியில் ஒரு பங்கு பெற்றோர்களுக்கு,
இரண்டாவது பங்கு பித்ருக்களுக்கு (இறந்து போனவர்கள் நினைவாக),
மூன்றாவது பங்கு சமூகத்திற்கு (community), நான்காவது பங்கு அரசருக்கு அதாவது அரசாங்கத்திற்கு வரியாக (16% வரி எவ்வளவு நியாயமானது. கறுப்புப் பணத்திற்கு அவசியம் இருந்திருக்காதே). கடைசிப் பங்கு தான தர்மங்களுக்கு என்று பழைய நூல்கள் சொல்கின்றன. தானம் என்னென்ன? எது உயர்ந்த தானம்?
யாருக்குக் கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க வேண்டும்? தானத்தில் எத்தனையோ வகை உண்டு.
பொருள் தானம், வஸ்த்ர தானம் (உடை)
அன்ன தானம் (சாப்பாடு), பூதானம் (நிலம்),
கன்னிகா தானம் (கல்யாணம்), வித்யா தானம் (படிப்பு),
கோ தானம் (பசு). இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் எது உயர்ந்தது?
எல்லா தானங்களிலும் மிகச் சிறந்த தானம் அன்ன தானம்தான். ஏன்?
மற்ற எல்லா வித தானங்களிலும் தானம் பெறுபவருக்கு 'போதும்' என்ற திருப்தி
ஏற்படுவதில்லை. 10 ரூபாய் கொடுத்தால், 20 ரூபாய் கொடுத்திருக்கக் கூடாதா என்ற நினைப்பு வரும். ஆடைகள் கொடுத்தால், இதைவிட நல்ல ஆடைகள்
தரக் கூடாதா என்று நினைப்பார்கள். இதே மாதிரி மற்ற தானங்களிலும் ஏற்படும்.
ஆனால் ஒருவருக்குச் சாப்பாடு போட்டால், அவர் வயிறு நிறைந்துவிட்ட பிறகு மேலே ஒரு கரண்டி அன்னம் அளித்தாலும் கையை வைத்துத் தடுத்து "போதும், போதும்" என்று கூறுவார்கள். மேலும் வாயார வாழ்த்தவும் செய்வார்கள்.
எது மேலான தானம்?
எதனால் அதிக நன்மை கிடைக்கும்?
தானம் பெறத் தக்கவனை அணுகி தானம் செய்தல் மேலானது. உத்தமம். ஒருவரை அழைத்து தானம்செய்வது மத்திமம். யாசிப்பவனுக்கு தானம்செய்வது, மட்டமானது. சேவைசெய்தவனுக்கு கொடுத்த தானமோ பயனற்றது.
தானம் பெறத் தக்கவரின் இருப்பிடம் சென்று யாதொரு தானம் டுக்கப்படுகிறதோ
அது அளவற்ற பயனைத் தரும்.
மைமோனிடீஸ் (Maimonidies – வைத்தியர், தத்துவ ஞானி (1135 – 1204) யூத மதத்தைச் சேர்ந்தவர்) ஒரு கட்டுரையில் தானத்தின் எட்டு படிகளைப்
பற்றி விளக்குகிறார். தானத்தின் எட்டு படிகள் — கீழேயிருந்து
முதல் படி -மனத்திற்குப் பிடிக்காமலோ, மன வருத்தத்தோடோ கொடுப்பது. '
இந்த தானம் கையால் கொடுக்கும் தானம். இருதயத்திலிருந்து வரும் தானம் அல்ல.'
2ஆவது படி -சந்தோஷத்தோடு, ஆனால் கேட்பவர் தேவைக்குக்குறைவாகக்
கொடுக்கும் தானம்.
3ஆவது படி -சந்தோஷமாகவும், தேவையைப் பூர்த்திசெய்யும் வண்ணம ஆனால் கேட்ட பிறகு கொடுக்கும் தானம்.
4ஆவது படி -சந்தோஷமாகவும், கேட்காமலேயே தேவைக்கேற்ற தானத்தை தானம் பெறுபவர் கையில் கொடுத்து அவரை வெட்கப்படும்படி
செய்யும் தானம்.
5ஆவது படி- யாருக்காக தானம் கொடுக்கப்பட்டது என்ற தெரியாமலேயே தானம் செய்வது. முன்னோர்களில் சிலர் தங்கள் வீட்டு முற்றங்களில்
பண மூட்டைகளை தொங்கவிடுவார்களாம். பணம் தேவையுள்ளவர்கள் கொடுத்தவருக்குத் தெரியாமலேயே எடுத்துச் செல்வார்களாம்.
6ஆவது படி -தானம் கொடுத்தவரின் பெயர் விளம்பரப்படுத்தாமலேயே கொடுக்கப்படும் தானம். முந்தைய காலத்தில் சில நல்லவர்கள்
யாருக்கு உதவி தேவையோ அவர்கள் வீட்டுக்கு தானப் பொருள்களை அனுப்புவது உண்டு. யார் அனுப்பினர் என்பது பெறுபவருக்குத் தெரியாது.
7ஆவது படி -கொடுப்பவருக்கும் யாருக்கு கொடுக்கிறோம் என்று தெரியாது. வாங்கியவருக்கும் யாரிடமிருந்து வந்தது என்றுதெரியாது. இந்த தானம் சிறந்தது.
ஒரு பொது இடத்தில் (உதாரணம் கோவிலில் ஒரு அறை)
தானப் பொருள் கொடுக்கப்படும். வேண்டியவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றபட
விநியோகிக்கப்படும்.
8ஆவது படி -எல்லாவற்றிற்க்கும் மேலான உயர்ந்த தானம், ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகள். "Do not give a person a fish a day. But teach him how to fish."
"ஒரு மனிதனுக்கு தினந்தோறும் ஒரு மீனை தானமாகக் கொடுக்காதே. அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்துச் சொந்தக் காலில் நிற்க வை"
என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தேவை என்று வருகிறவர்களுக்கு ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ கற்றுக்கொள்ள வசதிகள் செய்வது
மிகப் பெரிய தானம். இந்த தானம்தான் அவர்களை மற்றவர்களிடம்
கை ஏந்தி நிற்காத நல்ல தன்மானமுள்ள மனிதர்களாக மாற்றும்.
இப்படி வெவ்வேறு விதமான தானங்கள் செய்து வழிகாட்டிகளாக இருந்த எத்தனையோ மகான்கள், பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய கதைகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன.

Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home