Wednesday, February 24, 2010

குறுந்தொகை

குறுந்தொகை:
 
பாடல்:

கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்

பலர் புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை ! நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்று இது தமியோர்மாட்டே.

முல்லைத் திணையில் புலவர் கருவூர்ப் பவுத்திரன் என்ற புலவரால் எழுதப்பட்ட  பாடல் இது.
 
விளக்கம் :

"கார் இருள் தென்படத்துவங்கும் மாலை வேளை வந்துவிட்டால், பணிகளை முடித்து எல்லோரும் தத்தம் வீடு திரும்பத் துவங்கும் இந்த வேளையில் முல்லை மலரே, உன் மொட்டுக்களை விரித்து இருப்பது,என்னைப்பார்த்து,என் தனிமையைப் பார்த்து புன்னகைத்து கேலி செய்வது போல உள்ளது.. இது நியாயமா, தகுமா இப்படித் துணையைப் பிரிந்து தனியாக இருப்பவர்களைப் பார்த்து சிரிப்பது?, வாழ்க நீ"

என்று தலைவனின் கூற்றாக, அவனின் புலம்பலை பதிவு செய்துள்ளார்.
 
 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home