Wednesday, February 24, 2010

குறுந்தொகை3

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு

குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்
அவர்திறந்து இரங்கும் நம்மினும்
நம் திறந்து இரங்கும்,இவ் அழுங்கல் ஊரே.

புலவர்: பெருங்கண்ணன்.. முல்லைத் திணை பாடல்
 
 
நகக் கீற்றென் இருக்கும் நிலவுக் கீறல் வளர்ந்து,வளர்ந்து முழுநிலவாய்,பெளர்ணமிப் பந்தாய் வான்வெளியில் உருள்கிறதே.. அதுபோலத்தான் என்காதலும் காமமும்.. மெல்லிதாய் பூத்து,வல்லியதாய் வளர்ந்து,காமப் பந்தாய்உருண்டு, என்னை உருட்டி,உழுக்கி பின் கை வளையல்கள் கூட நெகிழ்ந்து விழும்அளவு என்னை உருக்கி விட்டது..அவரின் அருகாமைச் சுகம் அற்றுப்போனதால் மரம்தப்பிய கசங்கிய இலைபோல ஆகிவிட்டேன். என் தலைவனின் தீண்டல் இல்லாமல்துவண்டு போன என் நிலை கண்டு வானம் கூட அழுது மழையாய் பொழிகிறதே.. என் காதல் தலைவனின் காதல் விளையாட்டுகள் இல்லாமல் வாடிப்போய் வருந்தும்என்னைவிட என் மேல் இரக்கம் கொண்டு எனக்காக இந்த ஊர் மக்களும்வருந்துகிறார்களே...

 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home