Wednesday, February 10, 2010

தலைவன் தலைவியைப் புகழ்தல்

விவேக சிந்தாமணி
 
10.தலைவன் தலைவியைப் புகழ்தல்

வண்டுமொய்த் தனையகூந்தல் மதனபண்டாரவல்லி
கெண்டை யோடொத்த கண்ணாள் கிளிமொழி வாயினூறால்
கண்டுசர்க் கரையோதேனோ கனியொடு கலந்தபாகமோ
அண்டர்மா முனிவர்க்கெல்லா மமுதமென் றளிக்கலாமே.

வண்டுகள் மொய்த்திருப்பதுபோன்ற கூந்தலை உடையவள், காமக் கருவூலம், கெண்டை மீன்போன்ற கண்ணாள், கிளிமொழியாள். இவளின் இதழ்நீர், கல்கண்டோ, சர்க்கரையோ, தேனோ, கனிப்பாகோ அறியேன். இதை தேவர், மாமுனிவவர்க்கெலாம் அமுதம் எனக் கொடுக்கலாம்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home