Wednesday, February 24, 2010

கம்பர்

பாடல்.

வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்
 
விளக்கம்.


மெல்லிய இடையைக் கண்ட வஞ்சிக்கொடியானது வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள,நடையழகைப் பார்த்ததும் அன்னப்பறவைகள் பயந்து ஒதுங்கிக்கொள்ள,கால்களைப் பார்த்து வெட்கி தாமரை நீருக்குள் மறைந்து கொள்ள,கண்களைக் கண்ட மீன்கள் ஓட,பஞ்சை விட மென்மையான பாதங்களை உடைய சீதை நீராடினாள்.

பாடலின் சிறப்பு

சீதை நீராடும் அழகை வர்ணிக்கும் பாடல் என்பதனால், தண்ணீரில் காணப்படும் வஞ்சிக்கொடி,அன்னம்,தாமரை,மீன்கள் போன்றவற்றை மட்டுமே பாடுபொருளாக எடுத்தாண்டதே கம்பரின் சிறப்பு.அவையனைத்தும் சீதையின் அழகைப் பார்த்து தோல்வியடைந்ததாக அற்புதமான கற்பனையாக கையாண்டது.
 
 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home