முற்பிறவி கதை!
முன்னொரு காலத்தில் காசி மாநகரை காசிராஜன் என்ற மாமன்னன் ஆண்டு வந்தான். அவன் செய்த அருந்தவத்தால் அவனுக்கு மதிவாணி என்ற பெண் குழந்தை பிறந்தது. அவள் அறிவில் கலைமகள் போலவும், அழகில் திருமகள் போலவும் விளங்கினாள். மதிவாணியின் அழகையும் அறிவையும், குணநலன்களையும் கண்டு காசிராஜனும் அவனது மனைவியும் உள்ளம் மகிழ்ந்தனர்.
அழகு, அடக்கம், கடவுள் பக்தி, அறிவு போன்ற அனைத்துக் குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற மதிவாணியின் திருமணத்தைப் பற்றி காசிராஜனும் அவனது மனைவியும் சிந்தித்தனர். சுயம்வரம் நடத்தத் தீர்மானித்து, அனைத்து தேச மன்னர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.
சுயம்வர நாளில் காசி மாநகரே திருவிழாக் கோலம் பூண்டது. எங்கும் தோரணங்கள் தொங்கவிடப்பட்டன. ஊர் முழுதும் அலங்கரிக்கப்பட்டன. பல தேசத்து மன்னவர்களும் காசி மாநகரை நோக்கிப் புறப்பட்டு வந்தனர்.
அவ்வாறு வந்த மன்னவர்களில், மகத நாட்டின் அரசகுமாரன் திரிலோசனனும் ஒருவனானான். அங்கு வந்த மன்னர்கள் அனைவரும் அழகும் கம்பீரமும் வீரமும் நிரம்பியவர்கள். எனினும் திரிலோசனோ ஏனைய மன்னர்களிடையே தனித்து உயர்ந்து நின்றான். அவன் அழகையும் தோள்களையும் கண்டவர்கள் கண் கொட்டாது புருவம் உயர்த்தி நின்றனர்.
சுயம்வர நாளும் வந்தது. எல்லா அரசகுமாரர்களும் தத்தமது ஆசனங்களில் வீற்றிருந்தனர். திரிலோசனன் கம்பீரமாகவும் அழகு பொலியவும் அமர்ந்திருந்தான்.
அப்போது, காசிராஜன், அரசகுமாரர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு இளஞ்சிங்கத்தைக் காட்டி, அதை அடக்குபவர்களுக்கே தன் பெண்ணான மதிவாணியைத் திருமணம் செய்து தரப் போவதாகக் கூறினான்.
மதிவாணியின் மீது எல்லா அரசகுமாரர்களும் விருப்புற்று இருந்தபோதிலும், அங்கு இருந்த இளஞ்சிங்கத்தைக் கண்டு அவர்கள் அஞ்சத் தொடங்கினர்.
சிங்கத்தைத் தான் அடக்கப் போவதாகக் கூறி, திரிலோசனன் எழுந்து நின்றான். கூண்டு திறக்கப்பட்டது. பாய்ந்து வெளியே வந்த சிங்கத்தை ஒரேபிடியாக பிடித்து, அதனோடு போர் புரியத் தொடங்கினான். அங்கிருந்த அரசகுமாரர்களும், மன்னர்களும், பெண்களும் திரிலோசனனுக்கும் சிங்கத்திற்கும் இடையே நடந்த போரினை இமை கொட்டாமல் கண்டனர். இறுதியில் சிங்கத்தை அடக்கிவிட்டான் திரிலோசனன்.
பிற அரசகுமாரர்கள் நாணி தலைகவிழ்ந்து நின்றனர். மதிவாணி திரிலோசனுக்கு மலர்மாலை சூட்டினாள். வேத கோஷங்கள் முழங்க, வேதியர் புடைசூழ திரிலோசனனுக்கும் மதிவாணிக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.
மதிவாணியைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன பல மன்னர்கள் திரிலோசனன் மீது பொறாமை கொண்டனர்.
திருமணம் முடிந்த அன்று மாலை, திரிலோசனன் கங்கை நதியில் நீராடி, காசி விசுவநாதப் பெருமானை வணங்கியபடி மெய்மறந்து நின்றிருந்தான். அவ்வேளையில் அவன் மீது பொறாமை கொண்ட மன்னன் ஒருவன், வாளால் திரிலோசனின் தலையை வெட்டி வீழ்த்தினான்.
திரிலோசன் தலை வேறு, உடல் வேறாக விழுந்தான். திருமணம் ஆன நாளிலேயே தன் கணவன் இறந்து போனதை அறிந்து மதிவாணி மூர்ச்சையடைந்து விழுந்தாள். காசிராஜனும் அவனது மனைவியும் கதறி அழுதனர்.
தன் கணவன் இறந்த துக்கத்தைத் தாளாத மதிவாணி, அன்றிரவு யாரும் அறியாதபடி, தற்கொலை செய்து கொள்வதற்காக, கங்கை நதியில் குதித்தாள். ஆனால், கங்கையானவள் அவளைக் கொல்லத் துணியாது நின்றாள்.
மறுநாள் காலை கங்கை நதியில் நீராட வந்த கௌதம முனிவர், நதியில் ஒரு பெண் தத்தளித்து வருவதைக் கண்டார். உடனே ஆற்றில் குதித்து, அவளது கூந்தலைப் பற்றி கரையிலேற்றினார். காப்பாற்றப்பட்ட மதிவாணி, முனிவரின் பாதங்களில் விழுந்து அழுதாள்.
கவுதமரோ அவளை போக்கி, ''பெண்ணே! நீ தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக!'' என்று வாழ்த்தினார். உடனே மதிவாணியோ, துயரம் தாங்காமல் அழுதாள்.
''முனிவரே! திருமணம் ஆன முதல் நாளிலேயே என் கணவன் இறந்து விட்டான். அந்தத் துயரத்தை தாங்க முடியாமல்தான் நான் கங்கையில் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளச் சென்றேன். இதை அறியாமல், என்னை, 'தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக!' என்று வாழ்த்துகிறீர்களே?'' என்று கூறி அழுதாள்.
அதற்கு கவுதமர், ''பெண்ணே! வருத்தம் கொள்ள வேண்டாம். இந்தப் பிறவியில் மீதமுள்ள காலத்தை தவமிருந்து கழிப்பாயாக. இதே திருமாங்கல்யம் உன் கழுத்தில் இருக்கும்படியே மறுபிறவி எடுப்பாய். அப்போது உன் கணவன் சூரிய குலத்தில் பிறப்பான். இந்த மாங்கல்யம் பிற மனிதர்களின் கண்களுக்குத் தெரியாது. உன் கணவனின் கண்களுக்கு மட்டுமே தெரியும். நீ அவனோடு பல்லாயிரம் ஆண்டு புகழ் பெற்று வாழ்வாயாக,'' என்று வாழ்த்தினார்.
மதிவாணி, கவுதமரின் ஆசிரமத்திலேயே தவம் புரிந்து, தன் வாழ்நாளைக் கழித்தாள். மறுபிறவியில் சந்திரமதியாகப் பிறந்தாள்.
திரிலோசனன் அரிச்சந்திரனாகப் பிறந்தான். சுயம்வரத்தில், யாரும் காண முடியாத திருமாங்கல்யத்தைக் கண்டு, சந்திரமதியை மணம் செய்தான்.
தேவேந்திரன், தேவலோகத்தில் அமர்ந்திருந்த முனிவர்களிடம், ''பூமியில் சிறந்த மன்னனாகத் திகழ்பவன் யார்?'' என்று கேட்டான். அதற்கு வசிஷ்ட முனிவர், ''என் சீடனான அரிச்சந்திரனே எல்லா மன்னர்களிலும் உயர்ந்தவன்,'' என்று கூறினார்.
இதைக் கேட்ட விசுவாமித்திரர், அரிச்சந்திரன் பொய் கூறுகிறவன்தான் என்று வசிட்டரின் கூற்றை மறுத்துப் பேசினார். கூடவே அதை, தான் நிரூபிக்கப் போவதாகக் கூறி அரிச்சந்திரனை பல துன்பங்களுக்கு ஆளாக்கினார். இதற்குக் காரணம் என்ன?
முற்பிறவியில் திரிலோசனனாகப் பிறந்திருந்த அரிச்சந்திரன், விசுவாமித்திரரைப் பணிந்து, ''எனக்கு இனி பிறவிகள் நேராதபடி செய்தருள வேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டான். அதற்கு விசுவாமித்திரர், ''திரிலோசனா! நீ பல பிறவிகள் எடுத்து தீர்க்க வேண்டிய ஊழ்வினைகள் நிறையவே உள்ளன. அவற்றையெல்லாம் நான் உனக்கு மறுபிறவியில் காட்டுவேன். அவற்றை வெல்ல வேண்டுமானால் நீ வாய்மைநெறி தவறாது வாழ்ந்து காட்ட வேண்டும். அவ்வாறு செய்வாயானால், மறுபிறவியோடு உன் பிறவி முடிந்து முக்தி பெறுவாய்,'' என்று அருள் புரிந்தார்.
திரிலோசனன் அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டான். மறுபிறவியில் அரிச்சந்திரனாகப் பிறந்தான். அவன் கொண்ட ஊழ்வினைகளை எல்லாம் அப்பிறவியிலே அனுபவித்து விடுமாறு செய்தார் விசுவாமித்திரர். அவனும் வாய்மைநெறி தவறாது, அவ்வினைகளின் பயனை எல்லாம் கடந்தான். அதோடு, மீண்டும் பிறவி வாய்க்காத பெரும்பேறு பெற்றான்.

Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home