Monday, April 05, 2010

நம்மில் யார் பெரிய துறவி

பகுதாதில் ஒரு கலீ·பா இருந்தார். அவருடைய நடவடிகைகள் மிகவும் ராஜரீகமாகவும்
ஆடம்பரமாகவும் இருக்குமாம்.
                கலி·பா என்னும் பதவி சாதாரணமானதல்ல. இஸ்லாமிய அராபியர் பலநாடுகளைக் கைப்பற்றி அங்கெல்லாம் இஸ்லாத்தைப் பரப்பினர். அத்தனை நாடுகளிலும் இருந்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மதத்தலைவராகவும் பேரரசராகவும் விளங்கியவர் கலீ·பா. எந்த ஒரு நாட்டிற்கும் சுல்த்தானாக முடிசூட்டப்படுபவர் கலீ·பாவிடம் சன்னத்து வாங்கவேண்டும். அப்போதுதான் அவருடைய பதவி அங்கிகரிக்கப்படும்.

                அவர் ஒருமுறை நாட்டுவளப்பம் காண தேசசஞ்சாரம் செய்தார். ஒவ்வொரு இடத்திலும்
கூடாரம் இறக்கித் தங்கினார். அவருடையகூடாரம் மிகப்பெரிதாகவும், பட்டாலும்
ஜரிகையாலும் போர்த்தப்பட்டதாகவும்இருக்கும். முளைகள்கூட பொன்னால் ஆனவை.

                அவருடைய பெரிய கூடாரத்தைச் சுற்றிலும் இன்னும் பல கூடாரங்கள். அவருடைய பரிவாரங்கள், அந்தப்புரம், படைவீடுகள் எல்லாமாகச் சேர்ந்து ஒரு நடமாடும் நகரமே அங்கிருந்தது. கடைவீதிகள் முதலியவையெல்லாம் கொண்டு பல வீதிகள் தெருக்கள் கொண்டு விளங்கியது.  
                அவர் ஒருமுறை அவ்வாறு டேரா அடித்திருக்கும்போது ஒரு பக்கிரி அவரை பார்க்க வந்தார். மிகுந்த அழுக்குடை, கந்தல். சிக்குப்பிடித்த நீண்ட சடைகள்.

                அவர் வந்ததும் வராததுமாக கலீபாவைப்பார்த்து, அவருடைய ஆடம்பரத்தைக் கண்டதனமாகக் கண்டித்து, திட்டி, சாபம ்கொடுக்கலானார்.

                கலீபா அவரை வணங்கி, ' ஐயா! ஆடம்பரமாயிருப்பதுவும் பாவம் என்பது உங்களால் தெரியவருகிறது. அதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வது?' என்று கேட்டார்.

                அதற்கு பக்கிரி, 'பாவத்துக்குத் தூண்டுதலாகவும் நித்தியமில்லாதவையானதும் ஆகிய இவற்றையெல்லாம் துறந்து, என்னுடைய சீடனாகி வெளியேறு', என்றார்.

                உடனே கலீபா தன்னுடைய முடியையும் முத்திரை மோதிரத்தையும் கழற்றி அமைச்சரிடம் கொடுத்துவிட்டு, "்சரி, வாரும். போகலாம்." என்று புறப்பட்டார்.

                கலீபாவும் பக்கிரியும் சிறிது தூரம்சென்றதும், பக்கிரி நிதானித்து நின்று, சூள் கொட்டிவிட்டு, வந்தவழியே  அவசரம் அவசரமாகத் திரும்பிப் போகலானார்.

                "எங்கே செல்கிறீர்கள்?", என்று கலீபா கேட்டார்.

                "சற்று இரும். என்னுடைய துணிமூட்டையை உன்னுடைய கூடாரத்தில் வைத்துவிட்டு
வந்துவிட்டேன். போய் எடுத்துக்கொண்டுவருகிறேன்", என்றார்.

                அதற்கு கலீபா  சொன்னார்:
                " சரிதான் உன்னுடைய துறவறம். நான் அப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யத்தையே நீ சொன்னசொல்லுக்காக அப்படியேஉதறித்தள்ளிவிட்டு வருகிறேன். உன்னால்  உன்னுடைய அழுக்கு மூட்டையைக்கூட துறக்கமுடியவில்லையே! நான் அத்தனை ஆடம்பரத்தையும் ஒரு கலீபா என்ற முறையிலேயே அனுபவித்துவந்தேன். அவை என் உடலைமட்டுமே தொட்டன. என் மனதை எப்போதுமே அவை வருடக்கூட இல்லை. பற்று ஏதுமில்லாமலேயே அவற்றை நான் வைத்திருந்தேன். ஒரு நொடியில் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வர என்னால் முடிந்தது".
                "நம்மில் யார் பெரிய துறவி?  நீரா நானா?' என்றாராம்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home