Monday, April 05, 2010

மன உறுதி

ஒரு சமயம் மாவீரன் நெப்போலியனின் வீரத்தை சோதிக்க விரும்பிய ஐரோப்பியத் தலைவர்கள், அவருக்கு ஒரு சோதனை வைத்தனர்.
அதன்படி ஓர் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நெப்போலியன் உட்பட அவரது படைத் தளபதிகள் மற்றும் முக்கிய வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் தேநீர் அருந்தும் போது வெளியே ஒரு பீரங்கியை வெடிக்கச் செய்வது என்று ஏற்கனவே திட்டம் தீட்டப்பட்டிருந்தது. வெளியே பீரங்கி ஒன்று தயார் நிலையில் இருந்தது. உள்ளே நெப்போலியன் உட்பட அனைவரும் தேநீர்க் கோப்பைகளை எடுத்து தேநீரை அருந்தத் தொடங்கினர்.
அப்போது—
பலத்த ஓசையுடன் வெளியே இருந்த பீரங்கியை வெடிக்கச் செய்தனர். சற்றும் எதிர்பாராத அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போன அனைவரும் பயத்தால் நடுங்கி, கையிலிருந்த தேநீர்க் கோப்பைகளைக் கீழே போட்டு விட்டனர்.
ஆனால் —
நெப்போலியன் திடுக்கிடவே இல்லை. மிகவும் இயல்பாக இருந்த அவர் தேநீரைச் சுவைத்தபடி, ''அங்கு என்ன சத்தம்?'' என்று மட்டும் கேட்டார். அவரது மன உறுதியைக் கண்ட ஐரோப்பியத் தலைவர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home