அன்பு, மன்னிப்பு
ஒரு சமயம் புத்தரும், அவருடைய சீடர்களும் காட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் அங்கு வந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். அப்போது அவனது கால், புத்தரின் காலில் பட்டு இடறியது. புத்தர் விழித்துக் கொண்டார். இடறியதால் சற்று தடுமாறிய அந்தத் திருடன், சற்று சமாளித்துவிட்டு வேகமாக ஓடினான். அவன் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்தார் புத்தர்.
உடனே தன் அருகில் படுத்திருந்த ஒரு சீடனைத் தட்டி எழுப்பினார். பிறகு துணி மூட்டையிலிருந்து ஓர் அழகிய கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
''யாரோ ஒருவன் நம்மிடமிருந்த ஓட்டைக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். பாவம்... அந்தக் கிண்ணம் அவனுக்குப் பயன்படாது. நீ வேகமாக ஓடிச் சென்று இந்தப் புதிய கிண்ணத்தை அவனிடம் கொடுத்து விட்டு வா. இதோ... இந்தப் பக்கம்தான் அவன் ஓடினான். விரைந்து ஓடு,'' என்றார் புத்தர்.
அவர் காட்டிய திசையில் சீடன் ஓடினான். நீண்ட நேரம் ஓடிய பின் திருடனைப் பிடித்தான்.
''அன்பனே! சற்று நில்! நீ தூக்கிக் கொண்டு ஓடி வந்தது ஓட்டைக் கிண்ணம். அது எதற்கும் பயன்படாது. அதற்குப் பதில் இந்தப் புதுக் கிண்ணத்தை வைத்துக் கொள். என் குருநாதர்தான் இந்த விஷயத்தை உன்னிடம் சொல்லி இந்தக் கிண்ணத்தை கொடுத்துவிட்டு வரச் சொன்னார்!'' என்று சொல்லி விட்டுக் கிண்ணத்தை அவன் கையில் திணித்தான்.
திருடனோ நெகிழ்ந்து விட்டான்.
அவன் கண்களில் நீர் திரண்டது. புத்தரின் அன்பு அவனைத் தடுமாற வைத்தது.அவன் சீடனுடன் நடந்து புத்தரை வந்தடைந்தான்.
''என்னை மன்னித்து விடுங்கள்!'' என்று கூறி அப்படியே அவர் கால்களில் விழுந்தான்.
புத்தர் அவனை வாஞ்சையோடு அள்ளி அணைத்தார்.
அப்போதே அவனும் அவரது சீடர்களில் ஒருவனாகிவிட்டான்.
அன்பு, மன்னிப்பு என்ற இந்த இரண்டு குணங்கள் மனிதர்களை எப்படி மாற்றிவிடுகிறது

Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home