Wednesday, March 31, 2010

I searched for God

I searched for God among the Christians and on the Cross and therein I found Him not.
I went into the ancient temples of idolatry; no trace of Him was there.
I entered the mountain cave of Hira and then went as far as Qandhar but God I found not.
With set purpose I fared to the summit of Mount Caucasus and found there only 'anqa's habitation.
Then I directed my search to the Kaaba, the resort of old and young; God was not there even.
Turning to philosophy I inquired about him from ibn Sina but found Him not within his range.
I fared then to the scene of the Prophet's experience of a great divine manifestation only a "two bow-lengths' distance from him" but God was not there even in that exalted court.
Finally, I looked into my own heart and there I saw Him; He was nowhere else.

Don't worry be happy

Here is a little song I wrote
You might want to sing it note for note
Don't worry be happy
In every life we have some trouble
When you worry you make it double
Don't worry, be happy......

Ain't got no place to lay your head
Somebody came and took your bed
Don't worry, be happy
The land lord say your rent is late
He may have to litigate
Don't worry, be happy
Lood at me I am happy
Don't worry, be happy
Here I give you my phone number
When you worry call me
I make you happy
Don't worry, be happy
Ain't got no cash, ain't got no style
Ain't got not girl to make you smile
But don't worry be happy
Cause when you worry
Your face will frown
And that will bring everybody down
So don't worry, be happy (now).....

There is this little song I wrote
I hope you learn it note for note
Like good little children
Don't worry, be happy
Listen to what I say
In your life expect some trouble
But when you worry
You make it double
Don't worry, be happy......
Don't worry don't do it, be happy
Put a smile on your face
Don't bring everybody down like this
Don't worry, it will soon past
Whatever it is
Don't worry, be happy

lover

Lover's nationality is separate from all other religions,
The lover's religion and nationality is the Beloved (God).

மல்லிகைப் பூக்கள்

அவள் கூந்தலில் வழிந்தோடும் மல்லிகைப் பூக்கள் அவள் நடக்கும் போது அசைந்தாடி அவள் கன்னத்தை முத்தமிடத் துடிக்கின்றன.

Labels:

Tuesday, March 30, 2010

கோலமென்ன கோலமே

"வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!"
- பட்டினத்தார்
 
"நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உணக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?"

என்று மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும்
அவலத்தை, நெத்தியடியாகப் பாட்டில்
சொன்னார் பட்டினத்தார்
 

 

Labels:

கூடவே வருவதென்ன?

ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?

Labels:

Monday, March 29, 2010

ஏண்டா வாயை மூடிக்கிட்டு இருந்தே

. 'க்ரூப் டிஸ்கஷனில் ஏண்டா வாயை மூடிக்கிட்டு இருந்தே... உனக்குக் காதலிலும் வாயைத் தொறக்கத் தெரியாது. அங்கேயும் பேசத் தெரியாது' என்று பயாலஜி வகுப்பில் அறுத்த தவளையை வகுந்தெடுப்பது போல் ஆணிவேர் அனாலிஸிஸ் நடக்கும்.

Labels:

தோல்வி

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

Labels:

நந்தலாலா

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா

Labels:

புத்தர்

புத்தர் நம்பும்படி ஆணையிட்டவரல்ல , சிந்திக்கும்படி அறைகூவினவர்.

Labels:

தீயாவோம்



தலைகீழாய் பிடித்தாலும்-நாம்
நேராய் எறியும் தீயாவோம்
துயரங்கள் வதைத்தாலும்-நாம்
தோல்விக்கு தோல்வி தந்திடுவோம்

பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்
உள்ளங்கையில் தண்ணீர் கொண்டு செல்லலாம்
மின்னலைப்பிடித்து
விண்ணில் செல்வோமே - நா.முத்துக்குமார்

Labels:

Sunday, March 28, 2010

கடமை

கைக்கு அருகில் உள்ள கடமையை முதலில் செய்யுங்கள்
அதற்கு அடுத்த கடமை தானே புலப்படும்

Labels:

Friday, March 26, 2010

Practice

"Practice doesn't make perfect - perfect practice makes perfect."

"My dad brought me up with a quote - 'Only those who attempt the absurd achieve the impossible.'"

"You can't practice all the time. If you do, you'll eventually burn out!"

"Just practicing isn't always enough. You have to be involved in what you are doing. You have to learn from the heart."

Wednesday, March 24, 2010

புல்லும் மண்ணும்

சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து நான் கேட்டேன் .உனக்கு ஒரே இடத்தில் இருப்பது சலிப்பாக இல்லையா என்று . அதற்கு சோளக் கொல்லை பொம்மை சொன்னது " என்னைப் பார்த்து வயலுக்கு வரும் பறவை குருவிகள் பயந்தோடுவதைப் பார்ப்பது எவ்வளவு ஆனந்தமாயிருக்கும் .அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்திருக்கிறாயா ?"
   உண்மை தான் உன்னைப் போல் தேகத்தில் (உடலில்) புல்லும் மண்ணும் நிரம்பியிருப்பவர்கள் இந்த ஆனந்தத்தை அனுபவித்து இருப்பார்கள்
     - கலில் கிப்ரான்

Labels:

துன்பத்தை அடைகிறார்கள்

மனிதர்கள் இரண்டு தருணங்களில் துன்பத்தை அடைகிறார்கள் .
ஒன்று அவர்கள் விரும்பியதை அடையாத போது .
மற்றொன்று அவர்கள் விரும்பியதை அடையும் போது .

Labels:

எதிர்பார்த்த நாட்களே அதிகம்

உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட
உன்னை எதிர்பார்த்த நாட்களே அதிகம் .

Labels:

Monday, March 22, 2010

பாடையேறினும் ஏடது கைவிடேல்

பாடையேறினும் ஏடது கைவிடேல்

Labels:

Sunday, March 21, 2010

பணம் பணமறிய அவா!

அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

Labels:

ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்

"பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு,
மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார்
மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை,
அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்"

Labels:

நான் படித்துச் சுவைத்தவை

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே!
மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட
ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்
மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

நன்றாகப் பேசுவது நல்லதுதான்
ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!

முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி
மெளனமாக இருப்பதுதான!

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!
பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!
இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது தெரியுமா?
மரியசார்லஸ்

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். விவேகமுள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்.
நிறையபேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திபடுத்த வேண்டியது
மற்றவரை அல்ல. உங்களைத்தான்.மேலே

இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது

அப்படியெனில்,

அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?

அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!

ஜேனட்லூர் என்பவருடய 'Simple Loving' என்ற புத்தகம் சில எளிமயான யோசனகளை முன் வைக்கிறது.

உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.

உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்றுவிடக்கூடா.

உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.

மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப்போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.

உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.

மனப்பான்மை என்றால் என்ன?

உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக்கையாக மாறிவிடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை

உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?

நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்

இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்

இன்றய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்

இன்றய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!

எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.

ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.

அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக்கூடாது. நீங்கள் அன்பு செய்வதால்தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார்! நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகீறீர்கள்?

கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. 'ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.

பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக்கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.

அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்ம வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்துவிடவில்ல. தாமாகவே பிரச்னகளுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர்.

தனித்தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தரும்.

ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவர் ரே, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார்.

அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படிக் ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்?

ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்,

அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!

வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்
களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசங்கள நீங்
கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.

நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள்: (பலருடைய அனுபவங்களிலிருந்து)

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம்.

ஒரு சிலர் மீது நான் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அவர்கள் மீண்டும் என் மீது அக்கறை காட்டுவதில்லை.

மற்றவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு வேண்டுமானால் நம் அழகால் வசீகரப்படுத்தலாம். அதற்கு மேல் வசீகரப்படுத்த நமக்கு நாலு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதான் எனக்கு முக்கியம்.

வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.

நான் அன்பு செய்பவரை விட்டுப் பிரியும் போது கனிவான வார்த்தையுடன் பிரிவது நல்லது. சிலசமயம் அவர்களை மீண்டும் சந்திக்காமலே போகக்கூடும்.

இனி இவர்களுடன் அன்போடு பழகவே முடியாது என நினத்த பிறகும், நீண்ட காலத்திற்கு அன்போடு பழகலாம்.

என் மனப்பான்மையை நான் கட்டுப்படுத்தாவிட்டால் அது என்னைக் கட்டுப்படுத்திவிடும்.

எவ்வளவுதான் ஒரு உறவில் உணர்ச்சிகள் தலைவிரித்து ஆடினாலும் அதையும் மீறி நல்ல காரணங்கள் இல்லாவிட்டால் ஒரு உறவு நீடிக்காது.

என்னை அன்பு செய்பவர்கள் நிஜத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்ல.

என் உற்ற நண்பருடன் சேர்ந்து ஏதாவது வேல செய்தாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அதைவிட மகிழ்ச்சியான நேரம் இருந்ததில்ல.

நான் வாழ்க்கையில் தவறு செய்விட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.

நான் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது.

நான் விரும்பும் வகையில் மற்றவர்கள் என்ன அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் என்னை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது.

Labels:

என்ன பெருமை இருக்க முடியும்

சுயநலத்தோடு வாழ்வது புண்ணியமும் அல்ல… புத்திசாலித்தனமும் அல்ல! ஒரு மனிதன் ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையே கைப்பற்றினாலும் அதில் என்ன பெருமை இருக்க முடியும்..?

Labels:

தேவர்

ஆசையுடையார்- விலங்கு
அன்புடையார்- மனிதர்
அருளுடையார்- தேவர்

Labels:

பகவத் கீதையின் ஸாராம்சம்

'பலனை மனதில் கொண்டு செயல்படு. அந்தப் பலனை அடைவதற்குத் தகுந்த மாதிரி திட்டமிடு'. நன்கு செயல்படு. ஆனால், பலன் நீ எதிபார்த்த மாதிரி அமைவதில்லை என்றால், உணர்ச்சி வசப்படாதே, அதை ஏற்றுக்கொள்வதில் கோபம், சலிப்பு, தளர்வு, வெறுப்பு போன்ற எதிர்ப்பு உணர்வுகள் கொள்ளாதே.'-பகவத் கீதையின் ஸாராம்சம்

Labels:

Wednesday, March 17, 2010

புலிகள்

புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது
ந‌ரிகள் போடும் ஆட்டமே
ந‌ரிகள் வேஷம் கலையும் போது
புலிகள் வென்று காட்டுமே

புல்லை கண்டு நடுங்கும் மனிதன்
இருக்கும் போதே சாகிறான்
புல்லை கத்தி ஆக்கும் மனிதன்
இறந்த பிறகும் வாழ்கிறான்

உண்ணும் உணவில் இல்லை வீரம்
வீரம் உள்ளது நெஞ்சிலே
வெற்றிச் சங்கை ஊதும் வரையில்
ூக்கம் இல்லை கண்ணிலே...

அறிவும், கல்வியும்

படித்தால் மட்டும் போதுமா?

* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர். 


* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.
* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.
* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார்.
-புத்தர்

அன்பான ஒரு வார்த்தை போதும்!

அன்பான ஒரு வார்த்தை போதும்!

* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.
* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.
* எவனும் தனக்குத் தானே தலைவனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகிக் கொண்டவன், தலைமை ஏற்கத் தகுதி உடையவனாகிறான். தலைமைப் பண்புகளுக்கு எல்லாம் அடக்கமே அடிப்படைப் பண்பாகும்.
* மூடர்களுடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், தனியே வாழ்வது சிறந்தது. துஷ்டர்களுடன் நட்புக் கொள்வதும் இதே போன்றதே. மூடர்களுடன் சேர்ந்தால் கவலையும், துஷ்டர்களுடன் சேர்ந்தால் பாவமும் நமக்கு உண்டாகும்.
* அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.
*புயல் காற்றுக்கு அசையாமல் பாறை இருப்பது போல, மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே கருதுவர்.
-புத்தர்

Tuesday, March 16, 2010

எப்போதும் நிதானமாக இருங்கள்

எப்போதும் நிதானமாக இருங்கள்

* சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொள்ளுங்கள். சுயநலத்தை ஒழித்து எல்லா உயிர்களையும் நேசியுங்கள். ஒழுக்கம் என்னும் அடித்தளத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
* ஆயிரம் பேர் கொண்ட படையை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வென்றவனே வெற்றிவீரன்.
* மனிதன் நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால் அவனைப் பின்தொடர்ந்து இன்பம் நிழல்போல வரும்.
* தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும்.
* வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள். எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
* நாவின் ருசிக்காக உயிர்க்கொலை செய்பவன் வாழும்போது மட்டுமில்லாமல் மரணத்திற்குப் பின்னும் துன்பத்தை அடைவான்.
-புத்தர்

வெற்றிவீரன்

ஆயிரம் பேர் கொண்ட படையை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வென்றவனே வெற்றிவீரன்.

எவ்ளோ சுகம்

ஆத்தி!  நம்ம வீட்டு மொட்டை மாடில மல்லாக்கப் படுத்துக்கிட்டு வானத்திலே நிலவையும், நட்சத்திரத்தையும் பாத்துக்கிட்டே தூங்கிறது எவ்ளோ சுகம் !...

Sunday, March 14, 2010

மனம்

வாழ்க்கை என்ற தேரில் நம்மைக் குதிரையாகப் பூட்டி கடிவாளத்தைத் தன் கையில் பிடித்துக் கொண்டு மனம் தான் ஜம்மென்று சவாரி செய்கிறது நிஜத்தில் . ஆனால் நாம் மனதிடம் அடிமைப் பட்டு இருக்கிறோம் என்பதைக் கூட நம்மால் உணர முடிவதில்லை

கடமை


 கடமையில் இருக்கும் போர்வீரனும், காதலில்   இருக்கிறவனும் எதுக்கும் பயப்படக் கூடாது .

மிகப் பெரிய யுத்தம்

யுத்தத்திலே மிகப்  பெரிய யுத்தம் ஒரு மனிதன் தன் மனதுடன் நடத்தும் யுத்தம் மட்டுமே .

விருப்பம்

விருப்பம் ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் தான்

சூபி ஞானம்

சூபி ஞானம் வாழ்வை பகுப்பதில்லை.தரம் பிரித்து வகைப்படுத்துவதில்லை .முழுவதுமாக அதனை ஏற்கிறது .தான் அதில் மூழ்கி விடுவதில்லை.தன்னுள் அதனை ஏற்றுக் கொண்டு அதற்கப்பாலும் தான் நிற்கிறது

தூங்கிறது எவ்ளோ சுகம்

ஆத்தி!  நம்ம வீட்டு மொட்டை மாடில மல்லாக்கப் படுத்துக்கிட்டு வானத்திலே நிலவையும், நட்சத்திரத்தையும் பாத்துக்கிட்டே தூங்கிறது எவ்ளோ சுகம் !...

உயிர் அசையும்

அன்பே! உந்தன் விழியசைவில் எந்தன் உயிர் அசையும்

Friday, March 12, 2010

யுகபாரதி

ஆயிரம் மைல் பயணமும்,அடி ஒன்று எடுத்து வைப்பதில்தான் இருக்கிறது.முயற்சி மேற்கொள்ள வெற்றி பற்றிய எதிர்பார்ப்பு அவசியமில்லை.முயற்சியில் தொடர்ந்து செல்ல,வெற்றி காணவேண்டும் என்றும் அவசியமில்லை. -யுகபாரதி
 

Labels:

காகிதம்

காகிதம் காற்றில் பறப்பதுபோல்
என் இதயம் காதலில்
பறக்கிறதே
 
பல நூறாண்டு
தீர்ந்தாலும் தீராமலே
எனை பேரன்பில் நீராட்டவா
 
விழி மூடாமலே
விரல் நீங்காமலே
உனை தாய்போல தாலாட்டவா

Labels:

உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்

உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கலகம் துணிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்

துடிக்கும் இதயம் கொளுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொறுங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்

Labels:

காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்ட அடிக்கவா

பூதலூரு ஏழு மையிலு
பூண்டிக்கோயில் நாலு மையிலு
காதலோட ஒன்ன நானும்
கட்டிப் புடிக்கவா – இல்ல
காவி வேட்டி கட்டிக்கிட்டு
பட்ட அடிக்கவா

Labels:

தாய் தோன்றினாள்

கடவுள் பார்ப்பதில்லை – அவர்
எதையும் கேட்பதில்லை – கேள்
அதனால் தாய் தோன்றினாள்

புனிதம் வேறு இல்லை – அட
அவள் போல் வேதமில்லை – பூ
உலகை தாய்க் காட்டினாள்

தோழிபோல துணையிருப்பாள்
மனதினிலே சுமந்திருப்பாள்
சுவாசக் காற்றைத் தருவாள்

Labels:

என்னில் நூறு மாற்றம்

என்னில் நூறு மாற்றம்
கண்டேனே எதிரில்
நீ வந்தால்

கண்ணில் காணும் காட்சி
எல்லாமே மறையும்
நீ சென்றால்

ஏனோ இது ஏனோ
புதிர்போலே நெஞ்சில்
தலைகீழாய் தடுமாறி
விழுந்தேனே உன்னில்

Labels:

Life is like a mountain

Life is like a mountain. Reaching its peak is my aim.
However trails are difficult to go through.

But what's important are -
The lessons I've learned,
Challenges I've experienced,
and the people I'm with in my journey.

Thursday, March 11, 2010

வீசுகின்ற பூவாசம்

வீசுகின்ற பூவாசம்
பூவுக்கில்லையே சந்தோஷம்

பூசிக்கொள்கிறேன் ஏதேதோ
தேகம் எங்கிலும் உன்வாசம்

Labels:

தென்றல் காற்று

தென்றல் காற்று
பூவுக்காக

சிதறும் தூறல்
பூமிக்காக

இன்று யாவும்
நாளைக்காக

எனது  பாடல்
யாருக்காக?

Labels:

கண்கள் தூங்கப்போவது

கண்கள் தூங்கப்போவது
கனவில் உன்னை காணவே
இரவோ பகலோ
எனக்கேதும் இல்லை
பிறந்தேன் உலகில் உனைச்சேரவே

Labels:

எதுக்கும் கலங்கி நிக்காதீங்க

இம்மாம் பெரிய பூமியில
எதுக்கும் கலங்கி நிக்காதீங்க

Labels:

வாழும் வாழ்க்கை

வாழும் வாழ்க்கை
சில நொடிகளில் முடியுமடா
காணும் யாவும்
தரும் அனுபவம் தொடருமடா

பகல் கனவினில் மிதந்திடும்
மானிடா
இதை நிலையென நினைப்பது
ஏனடா?

Labels:

மின்னல் பெண்ணே

மின்னல் பெண்ணே
ஜன்னல் மூடாதே
உன்னுள்  நானே
வெளியே தேடாதே

பிரிவதனால் உயிர்
முடிவதனால் – இந்த
காதல் சாகாதே

நீயிலாத வாழ்க்கையே
தேவை இல்லையே

Labels:

யுகபாரதி

நட்பின் மையத்தில் உழலும்போதுதான் படைப்பும் படைப்பாளனும் பிரகாசிக்கிறார்கள்.படைத்ததைப் பற்றி பேச என்ன இருக்கிறது ,படைப்பே பேசும்.

Labels:

தாவணி போட்ட தீபாவளி

பச்சத்தண்ணி நீகொடுக்க
ஆகிப்போகும் தீர்த்தமா
 
ஈரக்கொழ  குலுங்க குலுங்க
சிரிச்சி நின்னாளே  – என்ன
ஓரவிழி  நடுங்க நடுக்க
நெருப்பு வச்சாளே

Labels:

குறியும் இலக்கும்

ஷாஓலின் என்ற Martial Arts மரபைப் பற்றி கள்விப்பட்டிருப்பீர்கள்.
    அகத்தியத்தில் பலமுறை எழுதப்பட்ட ஒன்று.

    புத்தபிக்குகளால் வளர்க்கப்பட்ட போர்முறை ஒன்று அந்த மடத்தைச்
சேர்ந்தவர் களிடம்  உண்டு.


    அந்த மரபைச் சேர்ந்த மஹாகுரு ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள். வில்வித்தை, ஈட்டி எறிதல், மற்போர் போன்ற பலவற்றிலும் கைதேர்ந்தவர்.

    இன்னொரு நாட்டைச்சேர்ந்த வில்லி ஒருவன் அவரிடம் வந்தான். ஏதாவது நாடகத்தில் அல்லது படத்தில் வரும் கதாபாத்திரம் என்று நினைத்துவிடவேண்டாம். வில்வீரனுக்குப் பழைய பெயர் 'வில்லி'. ராமனை
'சுந்தரவில்லி' என்று, லட்சுமணனை 'உறங்காவில்லி' என்றும் குறிப்பிடுவார்கள்.

    அவரிடம் தன்னுடைய வில்வித்தைத் தேர்ச்சியைக் காட்டினான். ஒரு மரத்தைக் குறி வைத்து அம்பெய்தான். அதன் பின், இன்னொரு அம்பை எய்தான். அது முதல் அம்பைப் பிளந்துகொண்டு அதே இலக்கில் பாய்ந்தது.

    "இது போல் உம்மால் அம்பெய்ய முடியுமா? - எகத்தாளம், இறுமாப்பு, கர்வத்துடன் கேட்டான்.

    மஹாகுரு ஒன்றும் சொல்லவில்லை.

    தம்முடன் வருமாறு கைச்சைகையைக் காட்டிவிட்டு விடுவிடென்று எங்கோ சென்றார். காட்டுக்குள் நுழைந்து ஒரு மலையின் மீது ஏறிச் சென்றார்.

    அந்த மலையின்மீது ஒரு பெரிய பிளவு இருந்தது. அந்தப் பிளவு பலநூறு அடிகள் ஆழம் கொண்டது. அதன்மீது ஒரு மரத்தை வெட்டி குறுக்கே   போட்டிருந்தார்கள். அதன்மீது நடந்துதான் அந்தப் பிளவைக் கடக்கமுடியும். அதுவோ கனம் அதிகம் இல்லாதது. கோணல்மாணலாகவும் இருந்தது. காலை வைத்தாலேயே கடகடவென்று ஆடியது. கொஞ்சம் புரண்டாலும் கிடுகிடு பள்ளத்தில் விழுந்துவிட நேரிடும்.

    மஹாகுரு வில் அம்பை வில்லியிடமிருந்து வாங்கிக்கொண்டார்.

    மஹாகுரு அந்தமரத்தின்மீது கால்வைத்து நடந்தார். அதன் நடுப்பகுதிக்குச்
சென்றார்.


    அங்கு நின்றுகொண்டு வில்லை எடுத்து அம்பைப்பூட்டினார். மறு பக்கத்தில் தூரத்தில் தெரிந்ததொரு மரத்தைக் குறிவைத்து அம்பை எய்தார்.

    அது சற்றும் பிசகாமல் அந்த மரத்தின்மீது தைத்து நின்றது.

    குறுக்குப்பாலத்திலிருந்து திரும்பிய மஹாகுரு, வில்லையும் அம்பையும் திருப்பி வில்லியிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

    "இப்போது நீ அந்தப் மரத்தின்மீது நின்றுகொண்டு அதே மரத்தைக் குறிபார்த்து அம்பை எய், பார்க்கலாம்", என்றார்.

    அந்தப் பள்ளத்தைப் பார்த்ததுமே வில்லிக்கு நடுக்கம். அதுவும் அந்த மரத்தின் மீது ஏறுவதாவது.

    இருப்பினும் ஏறிச்சென்றான். மரம் ஆடியது. கொஞ்சதூரம் போனதுமே கீழே பார்த்தான்.
   
    வில்லிக்குத் தலை சுற்றியது; உடலெல்லாம் நடுங்கியது; வியர்த்து விறுவிறுத்துப் போனான். நாவெல்லாம் உலர்ந்து போயிற்று. ரல்கொடுக்கக்கூட அவனால் முடியவில்லை. நடுக்கத்தில் டக்கென்று கால் நழுவியது.
    அப்படியே படுத்துக்கொண்டு அந்த மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

    மஹாகுரு மரத்தின்மீது ஏறிச்சென்றார்.
    அந்த வில்லியை அப்படியே தூக்கினார்.
    திரும்பிவந்தார்.

    அவனை இறக்கிவிட்டுவிட்டு சொன்னார்.

    "உன்னுடைய திறமையெல்லாம் உன்னுடைய வில்லுடன்தான் இருக்கிறது. அதை
நீ ஆள்கிறாய். ஆனால் அதை எய்வதற்குக் காரணமாக இருக்கும் உன்னுடைய மனது உன்னுடைய கட்டுப்பாட்டிலும் ஆளுமையிலும்
இல்லை.  குறியும் இலக்கும் உன் மனதில்தான் பிறக்கின்றன.   அதை முதலில் கட்டுப்படுத்து."

Labels:

வெற்றி தரும் முருகன் திருக்கை வேல்


 

வெற்றி தரும் முருகன் திருக்கை வேல்
                        நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் சில ஆயுதங்கள் குறிப்பிடப்
படுவதைக் காணலாம். 
பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம், நாரயணாஸ்திரம் என்றெல்லாம் பெயர்கள் அடிபடும்.
                        அவற்றைப் பிரயோகித்தால் என்னமாதிரியான விளைவுகள்
ஏற்படும் என்பதும்
அடிக்கடி விளக்கப்பட்டிருக்கும்.

                        அஸ்திரங்களிலேயே மிகவும் வலிமையானவை மேலே குறிப்பிடப்பட்ட
மூன்றும்தான்.

                        இவை தவிர ஒவ்வொரு தெய்வமும் சில சிறப்பான ஆயுதங்களை வைத்திருப்பார்கள்.
                        சிவனுடைய மழு, திரிசூலம், விஷ்ணுவுடைய சுதர்சன சக்கரம், இந்திரனுடைய வஜ்ராயுதம், முருகனுடைய வேல் முதலியவை.

                        சில சமயங்களில் சில ஆயுதங்கள் போதாமற்போனதால் புதிய ஆயுதங்களைத் தோற்றுவித்துப் பயன்படுத்தவேண்டியதாயிற்று.

                        தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் அடிக்கடி போர்கள் நடந்தன.
அவற்றைத் தேவாசுரப் போராட்டம் என்று சொல்வார்கள். இவற்றின் நடுவே ஏதோ ஒரு
மாதிரியான ஸீஸ்·பயர் இருந்திருக்கும் சமயத்தில் தேவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும்
ததீசி என்னும் முனிவரிடம் பத்திரமாக வைத்திருக்குமாறு கொடுத்துவிட்டுச் சென்றனர்.

                        தெய்வீக ஆயுதங்களுக்கு அடிக்கடி பூஜை போடவேண்டும்; அவற்றிற்குரிய
பலியும் கொடுக்க வேண்டும். இந்த புனஸ்காரங்கள் குறைந்தால் அவற்றில் தேஜஸ்
குறையும்; வேகமும் வலிமையும் குன்றிவிடும்.

                        பல காலமாக தேவர்கள் வந்து கேட்காததால் ததீசி அத்தனை ஆயுதங்களையும் விழுங்கிவிட்டார். அவையெல்லாம் முனிவருடைய முதுகுத் தண்டிற்குள் அடங்கி அதனுடன் கலந்து விட்டன.
                        மீண்டும் திடீரென்று தேவர்கள் கேட்கும்போது, ததீசி தம்முடைய உடலைத் தேவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தாம் யோகநிஷ்டையில் அமர்ந்து ஆவியை நீக்கிக
்கொண்டார்.

                        ததீசியின் உடலிலிருந்து முதுகெலும்பை எடுத்துத் தேவதச்சனாகிய விஸ்வகர்மா மிகச்சிறந்த ஆயுதம் ஒன்றைச் செய்தான். தேவர்களின் அத்தனை ஆயுதங்களுடைய
சக்தியையும் பெற்றது அது.

                        அதுதான் வஜ்ராயுதம்.
                        அதை வைத்து அதன்பின் நடந்த தேவாசுரப்போரில் தேவர்கள் வென்றார்கள்.

                        விஷ்ணுவின் சுதர்சன சக்கரமும் வீரியம் மிக்கது.

                        ஆனாலும் சூரபன்மன் முதலியோருடன் நடந்த போரில் அவை பயன்படாமல் போயின.

                        சூரபத்மனுடைய தம்பியாகிய தாருகாசுரனுடன் நடந்த போரில் விஷ்ணுவின் சக்கரம் தாருகனின் மார்பை நோக்கி ஏவப்பட்டது. ஆனல் அது அவனுடைய மார்பில்பட்டு முனை
மழுங்கிக் கீழே விழுந்துவிட்டது.

                        தாருகன் அதை எடுத்துத் தன்னுடைய மார்பில் ஹாரமாகத் தொங்கவிட்டுக்
கொண்டான்.

                        இந்த ஆயுதங்களெல்லாம் பயனற்றுப்போயின என்பதால்தான் சூரனை அழிப்பதற்கு அம்பிகை தாமே இன்னொரு வடிவமாக ஆகி நின்று அந்த வடிவத்தை வேலாயுதமாக்கி அந்த வேலாயுதந்தன்னை முருகனுக்குக் கொடுத்தாள்.  அம்பிகை தன் வடிவமாகிய சக்தி வேலாயுதத்தை முருகனுக்கு வழங்கிய நாள்தான் தைப்பூசம்.

             

Labels:

வில்லெறிந்த விதுரர்


வில்லெறிந்த விதுரர்


                    மகாபாரதம் மிக மிக நீளமான இதிகாசம். அதில் பல வரலாறுகள்,  கதைகள், குட்டிக்கதைகள், சம்பவங்கள் எல்லாம் உண்டு. அவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி, அற்புதமான முறையில் அந்தக் கதையைப் பின்னியிருக்கிறார் வேதவியாசர். பாரதத்தின் முக்கிய க்ளைமாக்ஸ் பாரத யுத்தம். அதில் கௌரவர்களும் பாண்டவர்களும் மோதிக் கொள்கின்றனர். ஆனால் அந்த யுத்தத்திற்கு முன்பு பாண்டவர்கள் hopelessly out-numbered, out-matched, and out-gunned.

                   பாண்டவர்களிடம் ஏழு அக்குரோணி(அட்சௌஹினி) சேனையென்றால் கௌரவர்களிடமோ பதினொன்று.
                   பாண்டவர்களில் அர்ஜுனன், பீமன், பிமன்யு, கடோத்கஜன், திருஷ்டத்யும்னன் போன்ற மாவீரர்கள் இருந்தனர். ஆனால் கௌரவர்கள் தரப்பிலோ தானாகவே அல்லாது பிறரால் மரணம் அடையமுடியாத பீஷ்மர், அனைவருக்கும் ஆசானாகிய துரோணர், இறவாவரம்பெற்ற சிரஞ்சீவியும் வெல்லமுடியா வீரருமான அஸ்வத்தாமன், பாண்டவர்களை வெல்லும் வரத்தை சிவனிடமிருந்து வாங்கியிருந்த ஜயத்ரதன், கிழட்டுவீரன் பகதத்தன், பயிற்சியில் பீமனையும் விஞ்சிய துரியோதனன், அர்ஜுனனைப் பல வகைகளிலும் விஞ்சிய கர்ணன், ஆகிய பலர் இருந்தனர்.
                ஆயுதங்களை எடுத்துக் கொண்டால், துரொணர், பீஷ்மர், அஸ்வத்தாமன் ஆகியோருடைய ஆயுதங்களுக்கு ஈடாக ஏதும் இல்லை. கர்ணனுடைய நாகாஸ்திரம், சக்தியாயுதம், விதுரருடைய நாராயண தனுசு ஆகியவை விசேடமானவை.

                 தர்மம் இருக்குமே வெல்லும். தர்ம தேவனின் அம்சமாக பிறந்தவர்தான் தர்மபுத்திரரான யுதிஷ்டிரர். ஆகவே அவர் இருக்கும் கட்சியே வெல்லும். இது நியதி.

                 ஆனால் அந்த யுகத்தில் தர்மதேவன் தன்னுடைய அம்சத்தை ஒரே சமயத்தில் இன்னொரு பிறவியும் எடுக்கவைத்திருந்தான். அவர்தான் மேதையும் மகானும் ஆகிய விதுரர். வேதவியாசருக்குப் பிறந்தவர். மன்னன் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியவர்களின் தம்பியாகவும், அமைச்சராகவும், ஆலோசகராகவும் விளங்கினார். 'புத்தியில் விதுரன்' என்ற சொற்றொடருக்குக் காரணராகவும் வி¢ளங்கியவர். 'விதுரநீதி' என்ற பெயரில் அவருடைய நீதித்துறை விளங்கியது. அவரிடம் உள்ள நாரயண தனுசு அவரை வெல்லப்படமுடியாத பெருவீரராக்கி விட்டிருந்தது. மேலும்  யுத்த அரங்கத்தில் அவருடைய ஆலோசனைகள் கௌரவர்களுக்கே
வெற்றியை நிச்சயப்படுத்தியிருக்கும்.

                அதுவும் அவர் தர்மதேவதையின் அம்சம். தர்மபுத்திரரின் தார்மீக பலத்தை அவர் சமனப்படுத்தி விடுவார். இப்படியாக கௌரவரின் வெற்றிவாய்ப்பு சர்வ நிச்சயமாக இருந்தது.

                ஆனால் கிருஷ்ணர் அவ்வாறெல்லாம் நடக்கவிட்டுவிடுவாரா என்ன?
                மகாபாரதத்தின் முக்கிய கட்டங்களில் ஒன்று, கிருஷ்ணன் தூது.
                யுத்தத்தைத் தவிர்ப்பதற்காக கிருஷ்ணரைப் பாண்டவர்கள் கௌரவர்களிடம் தூதாக அனுப்பினார்கள். சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டத்தில்,  ஆய்ச்சியர் குரவையில் வருகிறதல்லவா?.........

             மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
             கடந்தானை, நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
             படர்ந்தார ணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
             நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
             "நாராயணா" என்னா நாவென்ன நாவே!"

              என்றவாறு கிருஷ்ணர் அஸ்தினாபுரத்துக்குத் தூது சென்றார்.
            அவருக்கு அங்கே பல மாளிகைகள் காத்திருந்தும்கூட அங்கெல்லாம் அவர் தங்காமல் விதுரரின் குடிலில் தங்கிவிட்டார். இதனைப் பெரிய அவமானமாக துரியோதனன் கருதினான்.மேலும் எதிரியின் தரப்பில் விதுரர் இருக்கிறாரோ என்ற சந்தேகம் வேறு. ஏற்கனவே பல பிரச்னைகளில் விதுரர் பாண்டவர்களுக்குச் சாதகமாகப் பேசியும் உதவியும் வந்திருக்கிறார் அல்லவா! அரக்கு மாளிகை விவகாரத்தில், அதன் சூழ்ச்சியை சூசகமாக உணர்த்தியவர் அவரல்லவா?

                தூது அன்று காலையில் கிருஷ்ணர், துரியோதனனின் அரசவைக்கு வந்தார். யாரும் எழுந்து கிருஷ்ணருக்கு மரியாதை செய்யக்கூடாது என்று முன்கூட்டியே திருதராஷ்டிரன் சொல்லி யிருந்ததால் யாரும் எழவில்லை. விதுரரின் ஆசனத்துக்கு நேராக வரும்போது, கிருஷ்ணர் தன்னுடைய புல்லாங்குழலை நழுவவிட்டுவிட்டார். அது கிருஷ்ணருடைய காலடியில் விழுந்தது. விதுரர் எழுந்து,  குனிந்து குழலை எடுத்து மரியாதையுடன் இரு கைகளாலும் கிருஷ்ணனிடம் கொடுத்தார்.
                சற்று தூரத்தில், உயரத்தில் அரியாசனத்தில் அமர்ந்திருந்த துரியோதனனுக்கு இந்தக் காட்சி வேறு விதமாகத் தெரிந்தது. மிக ஆத்திரமுடன் விதுரரை வாய்க்கு வந்தபடி திட்டி, 'காட்டிக்கொடுப்பவன்',  என்றும்  'எதிரியின் கைக்கூலி' என்றும் குற்றம் சாட்டினான்.

                அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத விதுரர், துரியோதனனை திருப்பித் திட்டிவிட்டு,
                "அடே மூடனே! இனி இந்த யுத்தம் முடியும்வரையில் இந்த நாராயண தனுசைத் தொடவும் மாட்டேன். யுத்தத்தில் கலந்து கொள்ளவும் மாட்டேன்!" என்று சபதம் செய்து கூறிவிட்டு தம்முடைய நாராயண தனுசைக் கீழே தூக்கி எறிந்துவிட்டு துரியோதனனுடைய அரசவையிலிருந்து வெளியேறிவிட்டார்.

                 கௌரவர்களின் பக்கம் இருந்து வந்த தர்மதேவதையின்  அம்சம் அவ்வாறு அகன்றவுடன் அதிலிருந்து கௌரவர்களின் வெற்றிவாய்ப்பு மங்க ஆரம்பித்தது.

Labels:

Wednesday, March 10, 2010

இதில் நீங்கள் யார் ?

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி
இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி
மூன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி
நான்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி
வெற்றி பெரும் வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்
இதில் நீங்கள் யார் ?

Labels:

Tuesday, March 09, 2010

நீ மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் -வைரமுத்து

நீ மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டால் ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும் -வைரமுத்து

Labels:

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் (ரெண்டு கன்னம்)
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் (எடுத்து)
உள்ளங்கைச் சூடுப் பட்டு மலர்க் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
 
விளக்கம் :(சில நேரங்களில் தமிழ்ப் பாட்டுக்கே தமிழில் விளக்கம் தேவை.)
 
   தலைவியின் கன்னங்கள் சந்தனக்கிண்ணம் போல் குளிர்ச்சியாக உள்ளதால்    தொட்டுக்க் கொள்ள ஆசை பிறந்ததாம் தலைவனுக்கு.   தலைவன் தலைவிக்குப் பூவைத் தருகிறான் .(பூவை அள்ளிப் பூவை(பெண்) கையில் ) .தலைவியின் கையைத் தொட்டுப் பூவைக் கொடுத்ததால் தலைவனின் கை மணக்கிறதாம்.
தலைவன் பூவை எடுத்துக் கொடுக்கையில் இரு விரல்கள் தலைவியின் கையில் பட்டு விட்டதாம்.
அதனால்  தலைவியின் உள்ளங்கை சூடாகி அவள் கையில் வைத்திருந்த பூ வாடி விட்டதாம் . தலைவி அந்தப் பூவை சூடிக்கொண்டால் வாடிய பூ மலர்ச்சி(வாடாமல் இருக்குமாம்) பெறுமாம். (இதனை மங்கை நீயும் சூடிக்க் கொண்டால் அது கொஞ்சம் ஆறும் என்கிறான் தலைவன் )
 
 

Labels:

தூவிய பூ மலர் மேல் தோள் அணைத்துத் தூங்கிடும் தேன் துளியே

தூவிய பூ மலர் மேல் தோள் அணைத்துத் தூங்கிடும் தேன் துளியே 
 
விளக்கம் :
 
 இரவில் பூக்களின் மேல்  தலைவி தலைவனின் தோள் அணைத்துத் தூங்குகிறாள் .அதைத் தலைவன் பூவின் மேல் உள்ள தேன் துளியையும், பூவின் மேல் தன தோள் அணைத்து உறங்கும் தலைவியையும் ஒப்பிடுகிறான் . 
 
குறிப்பு : எல்லா மலர்களிலும் தேன் உள்ளது . வேப்பம்பூவிலும் கூட  துளி அளவு தேன் உள்ளது .

Labels:

Wednesday, March 03, 2010

Walk up behind your lover

Walk up behind your lover and point fingers shaped like gun into her back
"You're under arrest!"
For what?
"For stealing my heart."

Pick up a flower

Pick up a flower and walk over to your lover and say
"I was just showing this flower how beautiful you are."

எங்க தாத்த சொன்னது

நீங்க எல்லாம் நிறையா  சம்பாதிச்சு பெயரேடுக்கணும்னு அவசியம் இல்லை . ஆனா இன்னார் பையன் நல்ல பையன் அப்படின்னு பேர் இருந்தா போதும் - எங்க தாத்த சொன்னது

Labels:

Monday, March 01, 2010

அழகிய மலர்கள்

உலகில் உள்ள அழகிய மலர்கள் எல்லாம் காணும் சக்தி பெறுமாயின் " இவளுடைய கண்ணுக்கு யாம் ஒப்பாக மாட்டோம் " என்று தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் -திருவள்ளுவர்

Labels:

இருவகைப் பார்வை

அவளுடைய மையுண்ணும்  கண்களில் இருவகைப் பார்வை உள்ளது . ஒன்று என்னிடத்து நோய் செய்யும் பார்வை .மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும் பார்வை - திருவள்ளுவர்

Labels:

தம்ம பதம்

பிரியமானவற்றில் மனத்தைச் செலுத்தாதே. வெறுப்பானவற்றிலும் மனத்தைச் செலுத்தாதே.
பிரியமானதும் துக்கத்தைத் தருகிறது; வெறுப்புள்ளதும் துக்கத்தை உண்டாக்குகிறது.
ஆகையினாலே பிரியம் கொள்ளாதே. ஏனென்றால், பிரியமானவர்களைப் பிரியும் போது துக்கம் உண்டாகிறது. விருப்பும் வெறுப்பும் அற்றவர்களுக்குத் தளை (பற்று) இல்லை-
தம்ம பதம்
 
 

Labels:

மூடர்கள்- தம்மபதம்

"எனக்கு மக்கள் உள்ளனர், செல்வம் இருக்கிறது" என்று மூடர்கள் கவலைப்படு கிறார்கள். அவர்கள் தமக்குத் தாமே சொந்தமில்லாத போது, மக்களைப் பற்றியும், செல்வத்தைப்பற்றியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

Labels: