Tuesday, March 30, 2010

கோலமென்ன கோலமே

"வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!"
- பட்டினத்தார்
 
"நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உணக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?"

என்று மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும்
அவலத்தை, நெத்தியடியாகப் பாட்டில்
சொன்னார் பட்டினத்தார்
 

 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home