Tuesday, March 09, 2010

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் (ரெண்டு கன்னம்)
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் (எடுத்து)
உள்ளங்கைச் சூடுப் பட்டு மலர்க் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
 
விளக்கம் :(சில நேரங்களில் தமிழ்ப் பாட்டுக்கே தமிழில் விளக்கம் தேவை.)
 
   தலைவியின் கன்னங்கள் சந்தனக்கிண்ணம் போல் குளிர்ச்சியாக உள்ளதால்    தொட்டுக்க் கொள்ள ஆசை பிறந்ததாம் தலைவனுக்கு.   தலைவன் தலைவிக்குப் பூவைத் தருகிறான் .(பூவை அள்ளிப் பூவை(பெண்) கையில் ) .தலைவியின் கையைத் தொட்டுப் பூவைக் கொடுத்ததால் தலைவனின் கை மணக்கிறதாம்.
தலைவன் பூவை எடுத்துக் கொடுக்கையில் இரு விரல்கள் தலைவியின் கையில் பட்டு விட்டதாம்.
அதனால்  தலைவியின் உள்ளங்கை சூடாகி அவள் கையில் வைத்திருந்த பூ வாடி விட்டதாம் . தலைவி அந்தப் பூவை சூடிக்கொண்டால் வாடிய பூ மலர்ச்சி(வாடாமல் இருக்குமாம்) பெறுமாம். (இதனை மங்கை நீயும் சூடிக்க் கொண்டால் அது கொஞ்சம் ஆறும் என்கிறான் தலைவன் )
 
 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home