Monday, April 23, 2012

மானுட அறம்

என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள டீக்கடையில் அய்யப்பண்ணன் என்பவர் டீ
குடிக்க வருவார். நூறுவயது தாண்டியவர். விவசாயி. அய்யப்பண்ணனுக்கு
பொய்கையாறு அணை இன்று இருக்கும் இடத்தில் வயல் இருந்தது. அங்கே செல்ல
புலியூர்க்குறிச்சியில் பஸ் இறங்கி எட்டுமைல் நடக்கவேண்டும்.

அய்யப்பண்ணன் ஓட்டலில் நுழைந்து காலையுணவு சாப்பிடப்போகும்போது பஸ்
வந்துவிட்டது. அடுத்த பஸ் மதியம்தான். ஆகவே பாய்ந்து ஏறிவிட்டார். கையில்
தூக்குப்போணியில் பழையது இருக்கும் தைரியம். மதியம் வரை வெயிலில்
வேலைசெய்துவிட்டு பசிவெறியுடன் சாப்பிட வரும்போது பார்த்தால் ஒரு நாடோடி
அவரது போணிச்சோற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அருகே நின்ற கம்பைப்
பிடுங்கிக்கொண்டு அய்யப்பண்ணன் ஓடி வந்தார்.

நாடோடிக்கும் பயங்கரமான பசி போல. அவன் போணியை வழித்து
நக்கிக்கொண்டிருந்தான். பசியாறிய முகத்துடன் ஏறிட்டுப்பார்த்தான். 'எப்டி
நான் அவன அடிப்பேன்…பசியாறின மொகத்தில உள்ளது மகாலச்சுமியில்லா?' என்றார்
அய்யப்பண்ணன் என்னிடம். அய்யப்பண்ணனின் அந்த மனவிரிவே மானுட அறம்.-
writer jeyamohan
ref:http://www.jeyamohan.in/?p=26673

0 Comments:

Post a Comment

<< Home