Monday, October 10, 2011

போன ஞாயிற்றுக்கிழமை மறக்க முடியாத நாள் :


     நான் தினமும் காலையில்  வாக்கிங் போவேன். போகும் வழியில் ரோட்டோரத்தில் ஒரு வட்ட வடிவ பாதாள சாக்கடை திறந்து  கிடந்தது. மூடியை எவனோ தூக்கிட்டு போயிட்டான் போலையா... இல்லை கார்ப்பரேசன் காரன் மூடியை எங்கிட்டும் தூக்கிட்டு போயிட்டானோ தெரியாது. நான் நமக்கு என்ன ? யாரவது மூடி வைப்பாங்க இல்லை கார்ப்பரேசன் காரன் எதாவது ரிப்பேர் பாத்துக்கிட்டு இருப்பான் அவன் பின்னாலே மூடுவான் அப்படின்னு போயிட்டேன்.
    திரும்பி வரும் போதும் அதே மாதிரி தான் ஒன்னும் பண்ணாமே நடந்து போயிட்டேன். மறுநாளும் இதே மாதிரி பாத்தேன் . வாக்கிங் போயிட்டு திரும்பி வரும் போதும் சாக்கடை அப்படியே திறந்து கிடந்தது .  சரி ஏதாவது கல்லாவது எடுத்து சாக்கடையை சுத்தி போடுவோம் அந்த கல்லை பாத்திட்டு யாரும் அந்த பக்கம் போக மாட்டாங்க அப்படின்னு நினைச்சேன். இருந்தாலும் கூச்சமா இருந்தது. அதானாலே ஒன்னும் பண்ணாம பாதி தூரம் போயிட்டேன். அப்புறம் சரி எவன் என்ன நினைச்சா எனக்கேன்னணு  பக்கத்திலே இருந்த நாலு பெரிய கற்களை எடுத்து சாக்கடையை சுத்தி போட்டு விட்டேன். கற்களை எல்லாம் படுக்க வசமாகப் போட்டிருந்தேன் .
   அதுக்கப்புறம் போன ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் வாக்கிங் போகும் போது பாத்தேன்... அந்த சாக்கடைக்கு கொஞ்ச தூரத்தில் ஒரு அம்மாவும் ஒரு சின்ன பையனும் நின்று கொண்டிருந்தார்கள் . அந்த அம்மாவின் கணவர் அந்த சாக்கடையை சுத்தி இன்னும் இரண்டு கற்களை போட்டு எல்லா கற்களையும் செங்குத்தாக நிறுத்தி வைத்தார். அதைப் பாக்கிறப்ப எனக்கு  ரொம்ப சந்தோசமா இருந்தது ...

Labels:

0 Comments:

Post a Comment

<< Home