Monday, October 10, 2011

பதினைஞ்சு அடி தோண்டுனவனுக்கு

நான் சனிக்கிழமை டெல்லி லே  சாந்தினி சௌக்  மார்க்கெட் போயிருந்தேன் . ஷாப்பிங் பண்ண பணம் இல்லாததாலே எடிம் போனேன்.ரொம்ப பிசியான ஏரியா அதனாலே சரியான கூட்டம். நான் ஒரு அரை மணி நேரம் வரிசைலே நின்னேன் . எனக்கு முன்னாடி ரெண்டே ரெண்டு பேரு தான் அப்ப போயி எடிம்லே  பணம் இல்லைன்னு முன்னாடி இருந்த ரெண்டு பேரு சொன்னாங்க . உடனே எல்லா கூட்டமும் காலி ஆயிடுச்சி. நானும் என்னடா பண்றதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன். சரி ஆனது ஆயிடுச்சி. இவ்ளோ தூரம் வந்திட்டோம் .நாமளும் ஒருக்கா  செக் பண்ணுவோம்னு பாத்தா பணம்
எடிம் மசினே லே பணம் இருக்கு. எனக்கு முன்னாடி உள்ள ரெண்டு பேருக்கும் எடிம்   யூஸ் பண்ண தெரியலையா என்னனு தெரியலை ...
   பதினைஞ்சு அடி தோண்டுனவனுக்கு இன்னும் ஒரு அஞ்சு அடி தோண்டணும்னு தோணலை பாத்தீங்களா ...  அரை மணி நேரம் வரிசைலே நின்ன நமக்கு யாரோ சொன்னாங்கனு திரும்பி போறோம் பாத்தீங்களா... வாழ்க்கையிலேயும் நாம நிறைய விஷயம் அப்படி தான் பண்றோம் லே ...

Labels:

0 Comments:

Post a Comment

<< Home