Tuesday, June 14, 2011

தேரை விழுந்த பிள்ளை

    எங்க மாமா ஒருத்தர் குறைந்த எடையுடன் பிறந்தார். சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது வலது காலை இடது கால் மேல் போட்டுக் கொள்ளுமாம். இவருக்குத் தேரை விழுந்த பிள்ளை என்றார்களாம். அவரின் உடல் நிலையும் ரொம்ப கவலைக்கிடமாக இருந்ததால் தவளை வெட்டிப் பை போல் செய்து அதை எப்போதும் அவரது கழுத்தில் தொங்குமாம்.
அதற்குப் பின் தான் அவர் பிழைத்ததாகச் சொல்கிறார்கள்.
         சில தேங்காய்களில் தேரை விழுந்திருக்குமாம். அந்தத் தேங்காயின் தண்ணீரைக் குடித்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுமாம்.அதனால் தான் கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.

    தேரை - தவளை

Labels:

0 Comments:

Post a Comment

<< Home