Monday, May 03, 2010

ஊமைப்போல இருப்பதா

உன்னை ஒருவன்
தாக்கும் போது
ஊமைப்போல இருப்பதா?

கண்கள் ரெண்டை
மூடிக்கொண்டு
கல்லைப்போல கிடப்பதா?

தைரியமுள்ள
மனிதனுக்கெல்லாம்
சாவே இல்லை சொல்லடா

வருவதை பின்னால்
பார்த்துக்கொள்வோம்
எதிரியைச் சுட்டுத் தள்ளுடா

ஆறில் தொடங்கி
அறுபதுவரைக்கும்
ஒவ்வொரு நொடியும் மரணமே

அதுதான் வாழ்க்கை
என்பதை உணர்ந்தால்
உலகில் இல்லை கலகமே

Labels:

0 Comments:

Post a Comment

<< Home