கவி காளமேகப் புலவர் பாடல்
முருகப் பெருமானைப் பழிப்பது போல் புகழ்ந்து பாடியது :
அப்பன் இரந்து உண்ணி; ஆத்தா மலைநீலி
ஒப்பரிய மாமன் உறி திருடி ; சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு
எண்ணும் பெருமை இவை
சிவபெருமான் இரந்து உண்பவன்.
தாய் மலையில் வாசம் செய்பவள்.
ஒப்பரிய மாமன் திருமால் வெண்ணை திருடுபவன்.
சப்பைக்கால் அண்ணன் பெரு வயிறன் ( விநாயகர்) .
இவை எல்லாம் முருகனுக்குப் பெருமைகள் என பழிப்பது போல புகழ்ந்து பாடியுள்ளார்.
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home