இருவர் படக் கவிதை
இருவர் படக் கவிதை :
உன்னோடு நான்இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூறு நிமிடங்களாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சிலநிமிடம் பயத்தோடு சிலநிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சிலநிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்

முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான்இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
உன்னோடு நான்இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எதுநியாயம் எதுபாவம் இருவருக்கும் தோன்றவில்லை
இதுஇரவா இதுபகலா அதைபற்றி அறியவில்லை
யார் தொடங்க ? யார் முடிக்க ?
இதுஇரவா இதுபகலா அதைபற்றி அறியவில்லை
யார் தொடங்க ? யார் முடிக்க ?
ஒருவழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கி
விட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் கலைந்தேன் ஆசையிலேநீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தைநீ அணைத்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுதகண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
ஆடை கலைந்தேன் வெட்கத்தைநீ அணைத்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுதகண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான்இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home