Wednesday, April 11, 2012

சிந்தனைகள்

நாம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் வழிபடுகிறோம். அவர்களின் பண்பாட்டை
நகல் செய்கிறோம்.
நம்முடைய பாடநூல்கள் எல்லாமே வெறும் மொழியாக்கங்கள். நம் சிந்தனைகள்
எல்லாமே கடன் வாங்கியவை. நம்முடைய அரசியல் கொள்கைகள் எல்லாமே போலியானவை.
நாம் இன்று உள்ளீடற்ற ஒரு சமூகம்.

ஆகவேதான் உலகின் மிகப்பிரம்மாண்டமான நாடாகிய நமக்கு இன்று எங்கும் எந்த
மதிப்பும் இல்லை. எந்தத் துறையிலும் நம்முடையது மட்டுமான எந்தப்
பங்களிப்பும் இல்லை. நாம் அதிகபட்சம் செய்வதெல்லாமே தகவல்தொழில்நுட்ப
குமாஸ்தா வேலைதான். யாரோ உருவாக்கிய வரைபடத்தை செங்கல் போட்டு நிரப்பும்
வேலை மட்டுமே நம்மால் முடிந்தது.-ஜெயமோகன்

Ref:http://www.jeyamohan.in/?p=26467

0 Comments:

Post a Comment

<< Home