Wednesday, July 28, 2010

ஆசை

நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.

Labels:

தேநீர்

கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். மற்றவர்கள் வழமைபோல் தேநீர் பரிமாறப்படும் பாத்திரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைப்பிடி வளையத்தைப் பிடித்தவாறு, அதன் அருகாமையிலிருக்கும் விளிம்பின் மேல் உதடுகளைப் பதித்து அருந்தினோம். ஆனால், அவர், பாத்திரத்தின் கைவளயமில்லாத பகுதியை இரு கைகளாலும் ஏந்தி, கைவளையத்தின் மேலேயுள்ள விளிம்பில் தன் உதடுகளைப் பதித்து தேநீரை அருந்தினார். ஏன் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில், "பாத்திரத்தின் அப் பகுதியில்தான் அநேகரின் வாய் படிந்திருக்க மாட்டாது"!.

Labels:

சிநேகிதி

"என்னுடைய சிநேகிதி கெட்டிக்காரி! என்னைப் பார்க்க வரும் பொழுதெல்லாம், தனது தோழிகளில் ஒருவரையும் தன்னுடன் கூட்டி வருவாள். ஆனால் அத் தோழி யாராக இருந்தாலும் தன்னைவிட மிகவும் அழகு குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாள்"!

Labels:

Tuesday, July 27, 2010

விழியினில் மொழியினில்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்

Labels:

காதலித்துப் பார் .

சுடும் நிலவு சுடாத சூரியன்
காதலித்துப் பார் .

Labels:

காதலித்துப் பார் ...

தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்
காதலித்துப் பார் ...

Labels:

Thursday, July 22, 2010

வெந்து மண்ணாவார்

முடிசார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும் முடிவில் பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவார் ...

Labels:

Monday, July 19, 2010

சந்திரபாபு

"தட்டுங்கள் திறக்கப்படும்' படம் எடுத்தேன். தயாரிப்பாளர்கள் நல்ல விலைக்கு படத்தை விற்றனர்.
படத்தின் நீளம், கொஞ்சம் அதிகமாகி விடவே, சர்சார்ஜ் (வரி) அதிகம் கட்ட வேண்டி வரும் என்று, நீளத்தை குறைத்துவிட முடிவு செய்தனர்.
என் உழைப்பு, சிந்தனை, ரத்தம், அனுபவம் எல்லாவற்றையுமே இதில் நான் கொட்டி, ஒவ்வொரு காட்சியையும் எடுத்திருந்தேன். எனக்கு தெரிவிக்காமலேயே, நீளத்தை குறைக்கிறேன் என்று சொல்லி, "கிளைமாக்ஸ்' காட்சிகளை வெட்டியும், குறைத்தும் விட்டனர்.
படம் வெளிவந்தது; எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
வாழ்க்கையிலேயே, ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டு வருடம், ஒரு புதுப் படத்திற்கும் நான் ஒப்பந்தமாகவில்லை.
ஒருவேளை சோற்றுக்கே தகராறு என்ற நிலை வந்து விட்டது. என் சொத்தை அடமானம் வைத்திருந்த நண்பர்களிடம் போய், பத்து ரூபாய் கடனாய் கேட்டேன்... "இல்லை' என்று அவர்கள் கூசாமல் சொல்லி விட்டனர்.
மின்சாரக் கட்டணம் கட்டாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, முன்று நாட்கள், விளக்கு கூட இல்லாமல், பட்டினியாக வீட்டிலேயே சிறைபட்டுக் கிடந்தேன். சே... என்ன வாழ்க்கை!
— 1968ல், சந்திரபாபு ஒரு பத்திரிகையில் எழுதியது.

Labels:

Friday, July 16, 2010

புலவரே

புலவரே, 'பத்துப் பாட்டு ' பாடு என்றேன்-
தொகை வேண்டுமென்றார்
'எட்டுத் தொகை' போதுமா எனக் கேட்க,
இல்லை. அது எனக்கு ' குறுந்தொகை' என்றார்.
ஓகோ 'ஐங்குறு நூறு' வேண்டுமோ என்றேன்.
நானூறு தருவீரோ என்றார்
அதுவும்
அக(த்தில்) நானூறு (காசோலை )
புற (த்தில் ) நானூறு (கருப்பு )
-மு.க. 1-10-1986.

From: http://santhanamk.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88

Labels:

ராக்கெட்

விலைவாசி ஏறுது ராக்கெட்ல...
ஷேர் இறங்குது மார்கெட்ல...
பணம் இல்ல பாக்கெட்ல...
துண்டு விழுது பட்ஜெட்ல !
அன்று சுகவாசி...
இன்று சன்யாசி...
காரணம் விலைவாசி !
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி விலைவாசி !
ஆக முடியுமா ?
இந்தியாவின் பெருமை
சந்திராயன் ராக்கெட் !
இந்தியாவின் சிறுமை
விலைவாசி ராக்கெட் !
கல்யாணம் , காது குத்துக்கு
லோன் போட்டோம்
அந்தக் காலம் !
காய்கறி வாங்க லோன்
கேக்கறோம் இந்தக் காலம் !

Labels:

மழை

"மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துப்
போகவேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !"

Labels:

குடிகாரனின் மகனிடம் வாய்பாடு

ஒரு குடிகாரனின் மகனிடம் வாய்பாடு கேட்டபோது :
16..... டிராப்..... = 1 அவுன்ஸ் .
24.....அவுன்ஸ்... = 1 பாட்டில் .
2.....பாட்டில்..... .= 1 கலகம் .
1.....கலகம்......... = 2 கைகலப்பு .
2....கைகலப்பு.. = 4 போலீஸ் .
4 ...போலீஸ்.... .= 1 மாஜிஸ்ட்ரேட் .
1..மாஜிஸ் ட்ரேட் = 2 வருஷம் .

Labels:

உன்னை என் காலால் மிதிப்பேன்

"காலா, என் காலருகே வாடா, உன்னை என் காலால் மிதிப்பேன் "என்றான் பாரதி. நாம் யாரையாவது மிதிக்கவேண்டுமென்று நினைத்தால் போய்த்தான் மிதிப்போம். "நான் உன்னை மிதிக்கணும், பக்கத்தில் வாடா" என்று கூப்பிடமாட்டோம். உயிரைப் பறிக்க வருகிற எமனையே "டே காலா...." என்றான் பாரதி. இந்த ஆண்மை, தன்னம்பிக்கை தான் தமிழ்க் கவிஞ்ஞனுக்கே உள்ள பெரிய சொத்து. அதனால்தான் எருமை வாகனத்தில் வரும் காலன், பாரதியின் உயிரைப் பறிக்க யானை மீது அம்பாரி வைத்து வந்தான்.

- வைரமுத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வலம்புரி ஜான் கூறியது. ஆனந்த விகடன் (03-09-1989).

பின் குறிப்பு :யானை மிதித்து பாரதி இறந்தான்

Labels:

14 -வருடம் எதற்காக ?

14 -வருடம் எதற்காக ?

கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதன் காரணம்:-
யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும, என்கிறது இந்துமத சாஸ்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள்.
இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம் . இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும்.
என்வே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான்.
-கவிஞர். முருக. தியாகராஜன்

Labels:

வலம்புரி ஜான்

காதல் பாடல்களை இயற்றிய பல கவிஞ்ஞர்களும், 'அடுத்த பிறவியிலும் நாம் இணை சேர்ந்து இருப்போம்; எனக்கு நீயே மனைவியாவாய் , உனக்கு நானே கணவன் ஆவேன்' என்று தான் பாடியிருக்கிறார்கள். பாரதியார் ஒருவர் தான் 'அடுத்த பிறவியில் நான் நீயாகவும், நீ நானாகவும் பிறந்து இணைவோம் ' என்று பாடினான்.

- வலம்புரி ஜான் கூறக்கேட்டது.

Labels:

சாங்கிய யோகம்

மனிதன் எந்தக் காரியத்தையும் இரகசியமாகச் செய்யமுடியாது. சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, ஆகாயம், பூமி, நீர், இதயம், யாமம், இரவு,பகல், தர்மம், நீதி, இறைவன் ஆகிய பதின்மூன்று சாட்சிகள் சதா மனிதனின் நடத்தையைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
உடல் அழியும்போது எல்லாம் முடிந்துவிட்டதாக மனிதன் நினைக்கிறான்.
ஆனால் மாபெரும் யாத்திரையில் மரணம் என்பது ஒரு நிலை மாற்றம் மட்டுமே !
--சாங்கிய யோகம்.

Labels:

புதிய அதிசயம்

புதிய அதிசயம்.
ஒரு புலவர் துரைரங்கன் என்ற மன்னனிடம் சென்றார் . துரைரங்கன் என்பவர் குறுனில மன்னர் . சிறந்த ரசிகர் . அறிஞர் .ஜோதிடக் கலையிலும் வல்லவர் . புலவர் , புரவலனைப் பார்த்து , " மன்னவரே ! ஒரு புதுமை சொல்லுகிறேன் கேள் . ஒரு பெண்ணுக்கு நான்கு புருவம் , ஐந்து கம்மல் , ஆறு தனம் , ஏழு கண் ," என்று ஒரு பாடலைப் பகர்ந்தார் .
" துங்கவரை மார்ப ! துரைரங்க பூபதியே !
இங்கோர் புதுமை இயம்பக் கேள் ! பங்கையக்கை
ஆயிழைக்கு நான்கு நுதல் , ஐந்து குழை , ஆறுமுலை
மாயவிழி ஏழா மதி ."
மன்னவன் , " பேஷ் !" என்று மெச்சி ஆயிரம் பொன் தந்தார் .
அருகில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ' என்ன ! ஒரு பெண்ணுக்கு நான்கு புருவமா ? ஐந்து கம்மலா ? ஆறு முலையா ? ஏழு கண்ணா ?" என்று எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து விளங்காது விழித்தார்கள் .
புலவர் விளக்கினார் . ராசிகள் 12 . மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் . இந்த அடிப்படையில் --
ஆயிழைக்கு நான்கு நுதல் -- ஆயிழை கன்னி . பன்னிரு ராசிகளில் கன்னி என்பது ஒரு ராசி . கன்யா ராசிக்கு நாலாவது ராசி தனுசு , நுதல் -- அதாவது அந்தப் பெண்ணின் புருவம் வில்லைப் போன்றுள்ளது .
ஐந்து குழை -- கன்யா ராசியில் இருந்து ஐந்தாவது ராசி மகரம் . அவளுக்கு மகரக் குழை .
ஆறு முலை -- கன்னியா ராசியிலிருந்து ஆறாவது ராசி கும்பம் . கும்பம் போன்ற தனம் .
ஏழாவது ராசி -- மீனம் . மீன் போன்ற கண் .
--திருமுருக கிருபானந்தவாரியார்

Labels:

பணம்

' பணம் மரத்தில் காய்ப்பது இல்லை ' என்று சொல்வது உண்மையில்லை . அது உண்மையென்றால் , பணம் இருக்கும் ' பேங்க் ' க்கு மட்டும் கிளை இருப்பது ஏன் ? யொசியுங்கள் !

Labels:

இராமன்

இராவணனை இராமன் வென்று சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியாயிற்று. பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று..திருமுடி கட்டிக் கொள்ள வேண்டியது தான் பாக்கி. ஆனால் இராமன் நேராக அயோத்திக்கு வந்து விட வில்லை என்கிறார் வால்மீகி. நந்தியம்பதியில் காத்திருக்கிறானாம். ஏன் தெரியுமா ?.பரதனுடைய அனுமதியில்லாமல் தலை நகரத்திற்குள் நுழைவது முறையாகாது என்பதற்காக.

Labels:

நட்பு

ராமர் காட்டுக்கு வந்ததும் முதமுதல்ல அவரைச் சந்திச்சது குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமரும் முதல் சந்திப்பிலேயே சாதி பாகுபாடு இல்லாம இணைஞ்சிட்டாங்க. அந்த சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமருக்கு கொடுத்தான் .
அப்போ மத்தவங்க, " ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை ? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்" னாங்க .
அப்போ குகன், " சாதாரண வேடனான நான் கொடுத்த இந்த பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டார் ராமர்." னான் .
" என்ன? "ன்னு பதில் கேள்வி வர, குகன் மூலமா கம்பர் எப்படி சமாளிக்கிறாருன்னு பாருங்க .
" தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்" னான் .
' இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு '.

Labels:

ராமபிரான்

ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்புராத் துணிகளைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்புமட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகானது அல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார் .
குளித்து முடித்து விட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது , ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடிதுடித்துக் கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது ! அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து , " தவளையே ! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே ! ஐயோ ! பெரும் தவறு செய்து விட்டேனே ! " எனக் கலங்கினார் .
தவளை கூறியது : " எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னை ' ராமா ! ராமா ! ' என அழைப்பேன் . ஆனால் , அந்த ராமனே இப்போது எனக்குத் தீங்கு செய்யும்போது நான் வேறு யாரைக் கூவி அழைப்பேன் ? " என்றது .

Labels:

இராவணனைப் பற்றி கூறிய கவிதை வரிகள்

கவிஞர் வாலி , இராவணனைப் பற்றி கூறிய கவிதை வரிகள் :
" குரங்கு என அதன் வாலில் தீ வைத்தானே ,
அது கொளுத்தியது அவன் ஆண்ட தீவைத்தானே !"

Labels:

Thursday, July 15, 2010

சிலப்பதிகார கதை

சிலப்பதிகார கதையை இசுலாமியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், ஜ்னாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் அழகாக , இரண்டு வரியில் கூறுகின்றார்:
"பால் நகையாள், வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகியாள் கால் நகையால் வாய் நகைபோய்க், கழுத்து நகை இழந்த கதை ".
விளக்கம்:பால் நகையாள்--பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கமாட்டாள்;
வெண்முத்துப் பல் நகையாள்--முத்துப் போன்ற பற்களை உடையவள்,
கால் நகையாள்-- கால் சிலம்பினால்;
வாய் நகை போய்-- புன் சிரிப்பு மறைந்து;
கழுத்து நகை-- தாலி.

Labels:

கீதாசாரம் .

கீதாசாரம் .

எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது .
எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது .
எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் .
உன்னுடையதை எதை இழந்தாய் , எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .
எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது .
எது இன்று உன்னுடையதோ , அது நாளை மற்றொருவருடையதாகிறது .
மற்றொருநாள் , அது வேறொருவருடையதாகும் .
" இதுவே உலக நியதியும் , எனது படைப்பின் சாராம்சமாகும் ".

Labels:

போட்டுத்தள்ளவேண்டியது

அடியோடு தோல்வியடையும் தருணத்தில் எல்லாமே போய்விடக்கூடிய சந்தர்ப்பத்தில் வேறு எந்த வழியும் இல்லாதபோது முன்னேறிச்சென்று போட்டுத்தள்ளவேண்டியதுதானே.

Labels:

Wednesday, July 14, 2010

காயகல்பம்

தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே

Labels:

Tamil books

அகத்தியர் பனிரெண்டாயிரம்
போகர் ஏழாயிரம்

போகர் ஏழாயிரம்

போகர் ஏழாயிரம் என்னும் நு�லில் மூன்றாம் காண்டத்தில் போகர் மக்காபுரி
கண்டது எனும் உட்தலைப்பு காணப்படுகிறது. போகர் மக்காபுரி சென்று வந்து
சமாதியிருந்த இடம் என்று ஓரிடம் (இன்னும்) பழனியில் பேணப்பட்டு
வருகிறது. நபி(ஸல்) அவர்களை தரிசிப்பதற்காக போகர்

"எழுந்துமே புகை ரதத்தை நடத்திக்கொண்டு
ஏகினேன் எருசலேம் நகரத்திற்கு" (3:222)

என்ற இடத்தில் ஜெருசலேம் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் மக்காவுக்கு
சென்றபோது


"வந்திட்டேன் நபி பாதம் காண வந்தேன்" ( 3:227)

என்று போகர் கூறினார்

"பட்சமுடன் கோரிக்குள் சென்றேனப்பா
நேர்த்தியாம் நவரத்ன சமாதிக்குள்ளே
நேர்மையுடன் நபியிருக்கச் சொன்னாரப்பா" ( 3:230)

அங்கே அசரீரியாகச் சில சொற்களைக் கேட்டபின்பு

"துணையாக யானுமொரு மலுங்கானேனே" (3:231)

என்று போகர் நபியின் சீடர் (முஸ்லிம்) ஆனதாகக் கூறியுள்ளார்.

Labels:

எட்டாயிரம்

எட்டாயிரம் வருடங்கள் தண்ணீரில் ஊறினாலும் உள்ளுக்குள் ஈரத்தைப் பற்றி இழுத்துக்
கொள்ளாத கிடையைப்போல சிலர் இருப்பர்.

Labels:

Tuesday, July 13, 2010

எள்ளளவும் அறியாதிருந்தேன்

உள்ளும் புறமுமாய் உடம்பில் இருந்ததை
எள்ளளவும் அறியாதிருந்தேன் பூரணமே

Labels:

புலம்பினேன்

மெய் வாழ்வினை நம்பி விரும்பி நாடாமல்
பொய் வாழ்வினை நம்பிப் புலம்பினேன் பூரணமே

Labels:

Sunday, July 11, 2010

யாராலும் அழிக்க முடியாது

எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை . போரினால் அதைச் சிறையில் அடைத்து விட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்.
தானியத்துக்குள்  போராளிகள் வாழ்ந்ததாக  ஒரு பழங்கதை உண்டு .ஒரு நாள் இந்த தானியத்தை நாங்கள் விதைப்போம். அது வயலாகி நிரம்பி வழியும் . அதை உலகம் எங்கும் விதைப்போம். எல்லாம் முடிந்து விட்டது. அனைத்தும் அழிக்கப்பட்டது என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.அழிக்கப் பட்ட இடத்தில் ஒரு புல் இருக்கும் . பூண்டு இருக்கும். அது முளைக்கும் அன்பது கற்பனையும் அல்ல ... இயற்கை. அந்த இயற்கையை யாராலும் அழிக்க முடியாது  ...

Labels: