Sunday, April 25, 2010

தாய்

தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே

பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையமால்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்கை இங்கே கிடையாதே

வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை ...ஏ

Labels:

0 Comments:

Post a Comment

<< Home