Sunday, January 31, 2010

மனிதர்களும் இப்படித்தான்

பகவான் ராமகிருஷ்ணரின் ஆசிரமத்தில் ஒரு விழாவிற்காக நூற்றுக்கணக்கில் லட்டுகள் செய்து அடுக்கி வைத்தனர். எறும்பு வந்தால் என்ன செய்வதென்று யோசித்தனர். பரமஹம்சர், லட்டுக் குவியலைச் சுற்றி சர்க்கரையால் வட்டம் போட்டார். வந்த எறும்புகள் சர்க்கரை யைத் தின்று விட்டுப் போயின. பரமஹம்சர் சொன்னார், "மனிதர்களும் இப்படித்தான்! பெரிய லட்சியங்களை விட்டு, விட்டு சின்ன விஷயங்களிலேயே சமாதானமாகி விடுகின்றனர்!

Labels:

நீயே கல்,நீயே உளி . நீயே சிற்பி

நீயே கல்,நீயே உளி . நீயே சிற்பி .
நாளும் தெரிந்து கொள். நாலும் தெரிந்து கொள் .

Labels:

Thursday, January 28, 2010

அழகு

தெரியாத காற்றும்
புரியாத கவிதையும்
சொல்லாத காதலும்
பிரியாத நட்பும்
கலையாத கனவுகளும்
என்றுமே அழகு தான்

Labels:

Wednesday, January 27, 2010

கோழிக் கொடியேந்தும் கோகோ-கோலா

 
 கோழிக் கொடியேந்தும் கோகோ-கோலா
 
     -முருகனைப் பார்த்து கவிஞனின் புதுக் கவிதை
 
விளக்கம் : கோ என்றால் அரசன்.  கோகோ என்றால் அரசர்களுக்கெல்லாம் அரசன்.
வேல் வைத்திருந்தால் வேலா... கையில் கோல்(கம்பு ) வைத்திருந்ததால் கோலா.
பி . கு : முருகன் ஆண்டி பண்டாரமா மலை மேல நின்னப்ப கையில் கோல் வைத்து நின்றான் .

Labels:

Tuesday, January 26, 2010

அன்பே

அன்பே! உன் அழகால் இரவைப் பகலாய் அறிந்தேன்

Labels:

Monday, January 25, 2010

கண்ணன்

குத்து விளக்கெரிய,
கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க,
மெல்லியலாள் காத்திருக்க
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம்பாவை தன்னை

Labels:

வண்ணமயிலே

"தான் பெற்ற செல்வனை ஏன் பெற்றோம் என்றுதான்
தாயன்று மாண்டு போனாள்
தந்தையும் இப்பிள்ளை உருப்படா தென்றுதான்
தணலிலே வெந்து போனான்.
ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்
உயரத்தில் ஒளிந்து கொண்டான்
உதிரத்தின் அனுவிலே தமிழன்னை மட்டுமே
உறவாக வந்து நின்றாள்
வான்பெற்ற பேறுபோல் யான்பெற்ற தமிழிலே
வாழ்கிறேன் வண்ணமயிலே!"

Labels:

கம்பன் ஏமாந்தான்

"கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை
ஒரு மலரென்றானே
கற்பனை செய்தானே!
கம்பன் ஏமாந்தான்"

"அம்புவிழி என்று ஏன் சொன்னான்?
அது பாய்வதினால்தானோ?"

Labels:

காலம்

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே!
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகனே!"


Labels:

Sunday, January 24, 2010

ஒரு நாட்டின் சுதந்திரம்

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல .

Labels:

Monday, January 11, 2010

நீராவி

வெளிநாட்டுலே நீராவில ரயில் விடுறான் 
நம்மாளு  இட்லி சுட்டு தின்கிறான்  -எம்.ஆர்.ராதா

Labels:

Sunday, January 10, 2010

தனிமை

தீயோடு போகும் வரையில்
போகாது இந்தத் தனிமை

Labels:

Friday, January 08, 2010

ஓரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது..

ஓரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது..
மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது,
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்..
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்!!
ஓ! ஓ! ஓ!
கருவாசல் விட்ட வந்த நாள் தொட்டு,
ஓ! ஓ! ஓ!
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓ! ஓ! ஓ!
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓ! ஓ! ஓ!
கண் மூடிக்கொண்டால்..

போர்க்களத்தில் பிறந்து விட்டோம் 
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்.

தீயோடு போகும் வரையில் 
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எறிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
ஓ! ஓ! ஓ!
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓ! ஓ! ஓ!
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓ! ஓ! ஓ!
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஓ! ஓ! ஓ!
அந்த கடவுளை கண்டால்...

அது உனக்கு இது எனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் எனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பது நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்..
ஓ! ஓ! ஓ!
பல முகங்கள் வேண்டும், சரி மாட்டிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
பல திருப்பம் தெரியும் , அதில் திரும்பிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
கதை முடியும் போக்கில், அதை முடித்துக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
மறுபிறவி வேண்டுமா??

Labels:

Thursday, January 07, 2010

நீயும் என்னைக் காதலித்தாயோ

உன் ஓர விழிபார்வைக்காக
ஏங்கியது சில காலம்
அப்பொழுது எல்லாம் என்னைப்
பார்க்காமல் சென்றாய்
நீ உன் கணவனுடன்
செல்லும் பொது
என்னை ஏக்கத்துடன்  பார்த்தவாறே
சென்றாய் ஒருவேளை
நீயும் என்னைக் காதலித்தாயோ

Labels:

ஒரு வேளை நீயும் என்னைக் காதலித்தாயோ

உன் ஓர விழிபார்வைக்காக
ஏங்கியது சில காலம்
அப்பொழுது எல்லாம் என்னைப்
பார்க்காமல் சென்றாய்
நீ உன் கணவனுடன்
செல்லும் பொது
என்னைப் பார்த்தவாறே சென்றாய்
ஒரு வேளை நீயும் என்னைக் காதலித்தாயோ

Labels:

தபோவனக் குடில்

தபோவனக் குடில் 
 தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும்
ஓரிரு பூ
இது போதும் எனக்கு -வைரமுத்து

Labels:

உன்கண்ணில் விழிக்கும் என் கண்கள்

அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளிஎழுச்சி பாடும்  
உன்பாதக் கொலுசு
உன்கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இது போதும் எனக்கு- வைரமுத்து

Labels:

சரி எது,தவறு எது

முன்னோர்களாலும்,கடவுளர்களாலும் கூட சரி எது,தவறு எது என்பதை நிர்ணயிக்க இயலாது

Labels:

தமிழன்

தமிழன் தனது உயிரைத் தியாகம் செய்வதற்கு எப்போது தயாராகிறானோ அப்போது அவன் விடிவுகாலம் நோக்கி அடி எடுத்து வைக்கிறான். விடிவுக்கான ஒரே வழி இதுவே

Labels:

Wednesday, January 06, 2010

இது போதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இது போதும் எனக்கு - வைரமுத்து

Labels: