Wednesday, November 18, 2009

குடை

நீ குடை பிடித்து நடப்பதைப்  பார்த்த   மழை கண்ணீருடன் சொன்னது ????....
பய புள்ள இப்ப  கூட குளிக்க மாட்டேங்குது பாரு !...

Labels:

Friday, November 13, 2009

உறியிலே தயிரிருக்க வூர்புகுந்து வெண்ணைதேடும் அறிவிலாத...

அறிவிலே பிறந்திருந் தாகமங்க ளோதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்

உறியிலே தயிரிருக்க வூர்புகுந்து வெண்ணைதேடும்

அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே.


நெறி=வழி

"அறிவுப் பிறப்பெடுத்துள்ளேன்" எனக் கூறி அறிவுபூர்வமாய்ச் சிந்தித்து ஆகமங்கள் அனைத்தையும் ஓதுகின்ற மனிதர்களே! அறிவுப் பிறப்பெடுத்தோர் செல்லும் வழி எது என அறிந்திடாது, மயங்கி, எது நேர்வழி என அறிகிலீர்.
நம் வீட்டு உறியிலேயே தயிர் இருக்க, ஊரிலுள்ள எல்லா வீடுகளிலும் சென்று வெண்ணையைத் தேடும் அறிவற்றவர்களாகிய உங்களுக்கு எப்படி விளக்குவேன்?

Labels:

சிவவாக்கியர்

சிவவாக்கியர்
**************
78.மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத் தடுக்குவார்

வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்

நங்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்

எண்கலந்து நின்றமாய மென்னமாய மீசனே!


வீட்டில் உள்ள மட்பாண்டம் உடைந்தால், அது எதுக்காகிலும் பயன்படுமென மூலையில் வைப்பர். வெங்கலத்தினால் செய்த பாண்டம் உடைந்தால், உருக்கி வேறு செய்து கொள்ளலாம் என காத்து வைப்பார்கள். நங்கலனாகிய(நம்+கலன்) உடலிலிருந்து உயிர் பிரிந்தால் பிணம் நாறுமென தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஆக, நம் உடலானது, மட்பாண்டம், வெண்கலப் பாண்டம் ஆகியவற்றின் மதிப்புக்கூட பெறாது. இவ்வாறு மதிப்பில்லா இவ்வுடலில் நீங்கள் உயிராய்க் கலந்து நின்ற மாயம் என்னவோ?

courtesy: ஞானவெட்டியான்

Labels:

எச்சில்

ஓதுகின்ற வேதம் எச்சில்; உள்ள மந்திரங்கள் எச்சில்

போகங்களான எச்சில்; பூதலம் ஏழும் எச்சில்

மாதிருந்த விந்து எச்சில்; மதியும் எச்சில்; ஒளிஎச்சில்,

ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே

Labels:

கோயிலாவது ஏதடா

கோயிலாவது ஏதடா ? குளங்க ளாவது ஏதடா ?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

Labels:

Thursday, November 12, 2009

இலக்கியம்

இலக்கியம் என்பது மிகுந்த உழைப்பை வேண்டும் ஒரு கலை. நீட்ஷே போன்றவர்கள் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் படித்தார்கள் என்று அறிகிறோம். ஒரு இசைக் கருவியைப் பயின்று கொள்வதற்கே தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு நாள் பயிற்சி தவறினாலும் தொடர்ச்சி விட்டுப் போகிறது. அப்படியானால் எழுத்துக்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்?

ஒரு மாட்டை அறுத்துக் கூறு போடுவதற்கும், ஆழ் கடலில் மீன் வேட்டைக்குச் சென்று வருவதற்கு எவ்வளவு பெரிய பயிற்சி தேவைப்படுகிறது? அதுவே தான் எழுத்துக்கும்.

Labels:

தலித்

'நான் ஒரு தலித்-அதனால் முப்பது ரன்கள் எடுத்து விட்டால் அது செஞ்சுரி' என்று சொன்னால் அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். - சாரு

Labels:

இப்படி நீ என்னை தண்டிப்பது நியாயமா ???

நெஞ்சில் வலியெடுத்துத்
துடிக்கின்றேன்
காரணம் உன்
அறியாமையை கண்டு...

என்னை அறியாமல்
என் மனதை
வருடியது நீ
ஆனால் உன்
சொல் என்னும்
அம்புகளால் என்னை
கொள்ள்கிறாய் ...

சொல் அம்புகளால்
நெஞ்சை துளைத்து
விட்டு ....
வலிக்கிறதா என்று
கேட்கின்றாய்
வேதனையாக
இருக்கிறது

ஏற்கனவே ரணமாகிப்போன
போன என் இதயமதில்
உன் சொல் அம்புதனை
வீசி விட்டு
இரகசியமாக
என் வேதனையை
ரசிக்கின்றாய் ....

இப்படி நீ என்னை
தண்டிப்பது நியாயமா ???

Labels:

வாழ்க்கை மிகவும் அழகானது

இருக்கின்ற எல்லா உறவுகளுடன் பாசமாக இருப்பது ஒரு கட்டம்.. இதே உறவுகள் நம்மை விட்டு பிரியும் போது அதை பக்குவமாக எடுத்துக் கொள்வது இன்னொரு கட்டம்.. வாழ்க்கை மிகவும் அழகானது.. -- அபியும் நானும்

Labels:

உணர்ச்சி வெள்ளம்!

தமிழனுக்குத் தலைகுனிவென்றால்
பொறுக்காது  உள்ளம்!
பொங்கிடுமே
உணர்ச்சி வெள்ளம்!

Labels:

சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்

சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

Labels:

Wednesday, November 11, 2009

சாமிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்

ஒருவன்: எனக்கு எந்த மதமும் கிடையாது
இன்னொருவன் : ஆனா நீ சாமி கும்பிடறியே
ஒருவன்: சாமிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் ?

Labels:

Some times I feel like...

Sometimes I feel like
a motherless child
A longway from my home.
oh... My Brothers
A longway from my home

ஒரு புறா எங்கு சென்றாலும் புறா தான்

ஒரு புறா எங்கு சென்றாலும் புறா தான் ...
மனிதன் மனிதனாக இருப்பதில்லை .
ஒருவன் கோவிலுக்கு சென்றால் அவன் ஹிந்து . மாதா கோவிலுக்கு சென்றால் அவன் பெயர் கிறிஸ்தவன் . மசூதிக்குச் சென்றால் அவன் ஒரு முஸ்லிம் ...
ஒரு புறா எங்கு சென்றாலும் புறா தான் ...

Labels: